தொண்டை வள நாட்டிலுள்ள, திருச்சகமங்கை என்ற ஊரில், வேளாளர் குளத்தில் உதித்தவர் சாக்கியர். இவர் காஞ்சிபுரத்துக்குச் சென்று ஞானம் பெற வழிகளை ஆராய்ந்தார். முடிவில் "சாக்கிய சமயம்' எனப்படும் பெüத்த மதத்தில் சேர்ந்தார். எனினும், அவர் மனம் அமைதி பெறவில்லை.
பெüத்த மதத்துக்குரிய காவி உடையை விட்டுவிடாமல், அகத்தில் சிவனடியாராக வாழத் தொடங்கினார். எல்லை மீறிய ஈடுபாட்டால் அன்றாடம் திருவீரட்டானேசுவரர் மீது கல் எறியத் தொடங்கினார். அவ்வாறு எறிகின்ற நேரத்தில் அவரது மனதில் தோன்றிய ஆனந்தம் "இறைவனின் திருவருள் குறிப்பு' என்று நினைத்தார் சாக்கியர்.
ஒருமுறை கல் எறிய மறந்து உண்பதற்கு அமர்ந்தார். அப்போது திடீரென கல் எறிய மறந்ததை நினைத்து, சாப்பிடாமல் ஓடிச் சென்று இறைவன் மீது கல் எறியக் கையைத் தூக்கினார். அப்போது அவரைத் தடுத்த இறைவன், காட்சி அளித்து
ஏற்றுக்கொண்டு கயிலைக்கும் அழைத்துச் சென்றார்.
அழகிய கோலத்தில் மூலவர் வீரட்டானேசுவரர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அவரின் பின்புறம் மதிற்சுவர் மாடத்தில் ஆதிமூலவர் காட்சி தருகின்றார். இவர் மீது ஏராளமான வடுக்கள் காணப்படுகின்றன. இவரே சாக்கியரால் கல்லடிபட்டவராக இருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.
இவரின் எதிரே விநாயகருக்கு அருகில் எளிய உருவில் அழகிய சிலையாகச் சாக்கிய நாயனார் தன் கைகளில் பெரிய கல்லைப் பிடித்துக் கொண்டு, அதை இறைவன் மீது எறியும் கோலத்தில் இருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.
கோயில் வெளிப்புறம் உயரமான கல் மேடையில் சிறிய வடிவில் நந்தி தேவர் இறைவனை நோக்கிக் காட்சி தருகின்றார்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கே சுமார் 1 கி.மீ. தொலைவில், கோனேரிக்குப்பம் ரயில்வே கேட்டுக்கு முன்னால், அப்பாராவ் தெருவில் கோயில் அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.