வார பலன்கள்: 12 ராசிக்காரர்களுக்கும்!

இந்த வாரம் 12 ராசிக்கும் என்னென்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளலாம்...
weekly predictions
வார பலன்கள்

தினமணி இணையதள ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (டிச. 05 - 11) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

1. மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பாராட்டுடன், பணவரவும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் வெளியூர் சென்று அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். விவசாயிகள் சக விவசாயிகள் மத்தியில் செல்வாக்கைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாகப் பேசவும். கலைத்துறையினருக்கு பொன்னான வாய்ப்புகள் தேடிவரும். பெண்கள் கணவரின் மனமறிந்து நடந்துகொள்வீர்கள். மாணவர்கள் சக மாணவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

2. ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

உயர்ந்தவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவீர்கள். காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் தடைபட்டிருந்த காரியங்களில் வெற்றிவாகை சூடுவீர்கள். வியாபாரிகள் தங்கள் பொருள்களை புதிய சந்தையில் விற்க முயற்சி செய்வீர்கள். விவசாயிகளுக்கு விவசாயப் பணிகள் அனைத்தும் சுமுகமாக முடியும்.

அரசியல்வாதிகள் திறமையாகப் பேசி மற்றவர்களைக் கவருவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் மனநிம்மதி அடைவீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் சாதகமான நிலை தென்படும். மாணவர்கள் படிப்பில் முதலிடத்தில் வருவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

3. மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். மழலைப் பாக்கியம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்துகொள்வீர்கள். வியாபாரிகள் விலையைக் குறைத்து அதிக அளவில் விற்பனை செய்வீர்கள். விவசாயிகளுக்கு விவசாயப் பொருள்கள் விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் பொறுப்புகளைச் சரியாக உணர்ந்து செயல்படுத்துவீர்கள். கலைத்துறையினருக்கு வருமானம் நன்றாக இருக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் சாதகமான நிலை தென்படும். மாணவர்கள் பெற்றோருக்குப் பெருமை சேர்ப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

4. கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

சமுதாயத்தில் கௌரவமும், அதனால் அந்தஸ்தான பதவிகளையும் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் கால்நடைகளை நல்லமுறையில் பராமரிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் முக்கியப் பிரச்னைகளில் தன்னிச்சையாகச் செயல்பட வேண்டாம். கலைத்துறையினருக்கு புதிய கலைஞர்கள் நண்பர்களாவார்கள். பெண்கள் பொறுமையாக இருந்து குடும்பப் பொறுப்புகளைச் செயல்படுத்துவீர்கள். மாணவர்கள் விரும்பிய துறையில் முன்னேறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

5. சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். வியாபாரிகள் பொறுமையுடனும் நிதானத்துடனும் நடந்துகொள்வீர்கள். விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளுக்குச் சிறிது செலவு செய்ய நேரிடும்.

அரசியல்வாதிகள் உங்கள் அந்தஸ்துக்குக் குறைவான விஷயங்களில் ஈடுபடமாட்டீர்கள். கலைத்துறையினர் சிறு சிறு நுணுக்கமான விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள். பெண்கள் தங்கள் பேச்சினால் மற்றவர்களைக் கவர்ந்திழுப்பீர்கள்.

மாணவர்கள் விளையாட்டுத்தனத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

6. கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் மனதுக்குப் பிடித்த வேலைகளில் சேர்வீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பீர்கள். விவசாயிகள் வயல் வரப்புச் சண்டைகளில் முடிவைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் அமோகமான ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் தங்கள் கற்பனையை துறையில் செயல்படுத்துவீர்கள்.

பெண்கள் குடும்பத்துடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். மாணவர்களுக்குத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

7. துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியம், மனவளம் இரண்டும் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் வீடு களைக் கட்டும்.

உத்தியோகஸ்தர்கள் உழைத்து முன்னேற்றம் அடைவீர்கள். வியாபாரிகளுக்கு பணப்பெருக்கம் தானாகவே வரத்தொடங்கும். விவசாயிகளின் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளின் திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும்.

கலைத்துறையினருக்கு துறையில் பொறுப்புகள் அதிகரிக்கும். பெண்கள் குடும்பத்தில் நிம்மதியான சூழலைக் காண்பீர்கள். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - டிசம்பர் 5

8. விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பூர்விகச் சொத்துகளில் இருந்த அலைச்சல்கள் குறையும். வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களின் கடினமான பணிகளில் சக ஊழியர்கள் பங்கெடுத்துக் கொள்வார்கள். வியாபாரிகள் கூட்டாளிகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். விவசாயிகள் கூடுதலான விளைச்சலைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு திடீர் பணவரவு உண்டாகும்.

பெண்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். மாணவர்கள் பெற்றோரின் சொல்லுக்குக் கட்டுப்படுவீர்கள்.

சந்திராஷ்டம் - டிசம்பர் 6, 7 .

9. தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

நேர்முக, மறைமுக எதிர்ப்புகளில் இருந்து விடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை வெளியிடங்களுக்குச் சென்று விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் புதிய கால்நடைகளை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளுக்குக் கட்சி மேலிடத்திடம் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைக்கும். கலைத்துறையினருக்குப் புதிய பாராட்டுகளும் பரிசும் கிடைக்கும்.

பெண்கள் குடும்ப கெüரவத்தைக் காப்பாற்றுவீர்கள். மாணவர்கள் விடியற்காலையில் எழுந்து படித்து ஞாபகச் சக்தியை மேம்படுத்திக் கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - டிசம்பர் 8, 9.

10. மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

நெடுநாளாக தள்ளி வைத்திருந்த காரியங்களைச் செய்யத் தொடங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். விவசாயிகள் விவசாயப் பணியாளர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தை அனுசரித்துச் செல்வீர்கள். கலைத்துறையினர் பற்றிய விமர்சன பேச்சுகள் ஏற்பட்டு நீங்கும்.

பெண்கள் புதிய சேமிப்புகளில் நாட்டம் கொள்வீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - டிசம்பர் 10, 11.

11. கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பொது காரியங்களில் ஈடுபட்டு நல்ல பெயரெடுப்பீர்கள். நண்பர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வு பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு உழைப்பின் பலன் தாமதமின்றிக் கிடைக்கும்.

விவசாயிகள் அதிகமான நீர்வரத்தைக் காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும்.

பெண்களுக்கு விலை உயர்ந்த பொருள்கள் மீது ஆர்வம் உண்டாகும். மாணவர்கள் ஆசிரியர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

12. மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொருளாதாரத்தில் சிறிது ஏற்றம், இறக்கம் இருக்கும். வாக்குறுதிகளைக் கவனமாகக் கொடுக்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரிகள் வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களைச் செயல்படுத்துவீர்கள். விவசாயிகள் விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளுக்குக் கட்சியில் உயர்ந்தவர்களுடன் சந்திப்பு நிகழும். கலைத்துறையினர் சக கலைஞர்களுடன் இணைந்து செயல்படுவீர்கள்.

பெண்களுக்குப் பொருளாதார நெருக்கடிகள் குறையும். மாணவர்கள் சக மாணவர்களை அனுசரித்துச் செல்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com