அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

பூலோக வைகுண்டத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் சிறப்பு..
Published on

நூற்​றி​யெட்டு வைண​வத் தலங்​க​ளில் முதன்​மை​யான ஸ்ரீரங்​கம் ரங்​க​நாத சுவாமி கோயி​லா​னது "பூலோக வைகுண்​டம்', "பெரிய கோயில்' என்​றெல்​லாம் போற்​றப்​ப​டு​கி​றது.

பல கிரா​மங்​க​ளில் நெல் அறு​வ​டை​யான பின்​னர் நெல்லை மரக்​கா​லால் அளப்​ப​தற்கு முன்​னர் "திரு​வ​ரங்​கம் பெரிய கோயில்' என அழைத்து, அளந்த பின்​னரே இரண்டு, மூன்று எனத் தொடர்ந்து அளக்​கும் வழக்​கம் இருந்து வரு​கி​றது.

கோயி​லில் பெரு​மாள் } பெரிய பெரு​மாள், தாயார் } பெரிய பிராட்​டி​யார், தளிகை } பெரிய அவ​ச​ரம், வாத்​தி​யம் } பெரிய மேளம் என்று "பெரிய' என்ற அடை​மொ​ழிச் சிறப்​பு​டன் புக​ழப்​

ப​டு​கி​றார்.

நாத​மு​னி​கள், உய்​யக் கொண்​டார், ஆள​வந்​தார், பெரிய நம்​பி​கள், எம்​பெ​ரு​மா​னார், கூரத்​தாழ்​வான், பட்டர், நம் பிள்ளை, பெரிய வாச்​சான் பிள்ளை, பெரிய ஜீயர் போன்ற பல வைணவ ஆச்​சா​ரி​யர்​கள் இங்கே பெருந்​தொண்டு செய்​துள்​ள​னர்.

கோயி​லில் மாதம்​தோ​றும் திரு​

வி​ழா​தான். எனி​னும், மார்​கழி மாதத்​தில் நடை​பெ​றும் "வைகுண்ட ஏகா​தசி திரு​விழா' மிக​வும் சிறப்பு வாய்ந்​த​தா​கும். இந்​தத் திரு​விழா திரு​மொ​ழித் திரு​நாள் (பகல் பத்து), திரு​வாய்​

மொ​ழித் திரு​நாள் (இராப்​பத்து) என அழைக்​கப்​பட்டு, ஆழ்​வார்​கள் அரு​ளிய பாசு​ரங்​கள் பாடப்​பெற்று "தெய்​வத் தமிழ் விழா​வாக' நடை​பெ​று​கி​றது.

ஆழ்​வார்​க​ளில் மது​ர​கவி ஆழ்​வார் தவிர மற்ற அனை​வ​ரும் அரங்​க​னைப் போற்றி மகிழ்ந்​துள்​ள​னர். ஆண்​டா​ளும், திருப்​பா​ணாழ்​வா​ரும், அரங்​க​னோடு ஒன்​றிய பெரு​மை​யும் உடை​யது இத்​த​லம்.

அதி​க​மான பாசு​ரங்​க​ளைப் பாடி அரங்​க​னைப் போற்றி மகிழ்ந்​த​வர் திரு​மங்​கை​யாழ்​வார். "எந்தை தளிர் புரை​யும் திரு​வடி என் தலை மேலவே' என்று சொல்லி, திரு​மங்​கை​யாழ்​வார் பெரு​மா​ளின் தரி​ச​னம் பெற்​ற​தைப் பேசும் திரு​நெ​டுந்​தாண்​ட​கம் எனும் பிர​பந்​தம், திரு​வி​ழா​வில் முதல்​நாள் அன்று அரு​ளப்​ப​டு​கி​றது.

பகல்​பத்து எனப்​ப​டும் திரு​மொ​ழித் திரு​நாள், கோயி​லில் அர்ச்​சுன மண்​ட​பத்​தில் நடை​பெ​றும். முதல் இரண்டு நாள்​க​ளில் பெரி​யாழ்​வார் அரு​ளிய பெரி​யாழ்​வார் திரு​மொழி பாசு​ரங்​க​ளும், மூன்​றாம் நாள் ஆண்​டாள் அரு​ளிய திருப்​பாவை நாச்​சி​யார் திரு​மொ​ழி​யும், நான்​காம் நாள் பெரு​மாள் திரு​மொழி திருச்​சந்​த​வி​ருத்​தம் பாசு​ரங்​க​ளை​யும், ஐந்​தாம் நாள் தொண்​ட​ர​டிப் பொடி​யாழ்​வார் அரு​ளிய திரு​மாலை, திருப்​பள்​ளி​யெ​ழுச்சி பாசு​ரங்​க​ளை​யும், திருப்​பா​ணாழ்​வார் அரு​ளிய அம​ல​னா​திப்​பி​ரான் பாசு​ரங்​க​ளை​யும், ஆறாம் நாள் மது​ர​கவி ஆழ்​வார் அரு​ளிய "கண்​ணி​நுண் சிறுத்​தாம்பு' பாசு​ரங்​க​ளை​யும், திரு​மங்​கை​யாழ்​வார் அரு​ளிய "பெரிய திரு​மொழி' பாசு​ரங்​க​ளை​யும், 7, 8, 9}ஆம் நாள்​க​ளில் பெரிய திரு​மொ​ழி​யும், 10}ஆம் நாள் பெரிய திரு​மொ​ழிப் பாசு​ரங்​க​ளையும், திருக்​கு​றுந்​தாண்​ட​கம், திரு​நெ​டுந்​தாண்​ட​கம் பாசு​ரங்​க​ளை​யும் நம் பெரு​மாள் முன்பு அரை​யர்​கள் அபி​ந​யத்​து​டன் வியாக்​யா​னம் செய்​வர்.

பத்​தாம் நாள் அன்று நம் பெரு​மாள் நாச்​சி​யார் கோலத்​தில் (மோகினி அலங்​கா​ரம்) உலா வரும் காட்சி அற்​பு​த​மா​னது. மனதை ஈர்க்​கும் வண்​ணம் அழ​கிய அலங்​கா​ரத்​து​டன் ஒய்​யா​ர​மாக அமர்ந்து அருள் வழங்​கும் கோலம் தனிச்​சி​றப்​பு​டை​யது.

திரு​வாய்​மொ​ழித் திரு​நாள் எனப்​ப​டும் இராப்​பத்து திரு​நா​ளில் முதல் நாளில் நடை​பெ​றும் "வைகுண்ட ஏகா​த​சித் திரு​விழா' மிக​வும் சிறப்பு பெற்று விளங்​கு​கி​றது. இவ்​வை​ப​வம் அனைத்து வைண​வத் தலங்​க​ளில் நடை​பெற்​றா​லும், திரு​வ​ரங்​கத்​தில் நடை​பெ​றும் விழா தனிச்​சி​றப்​புப் பெற்று விளங்​கு​கி​றது.

நம்​பெ​ரு​மாள் இரத்​தின அங்கி அலங்​கா​ரத்​து​டன், கிளி​மாலை அணிந்து அதி​காலை "பர​ம​பத வாசல்' எனப்​ப​டும் சொர்க்​க​வா​ச​லைக் கடந்து வந்து திரு​மா​மணி மண்​ட​பம் சென்று பக்​தர்​க​ளுக்​குக் காட்சி தந்து அரு​ளு​கி​றார். ஏழாம் திரு​நாள் திருக்​கைத்​தல சேவை, 8}ஆம் நாள் திரு​மங்கை மன்​னன் வேடு​பறி வைப​வங்​கள் நடை​பெறு​கின்​றன.

பத்​தாம் நாள் அன்று சிறப்​பான நிகழ்ச்​சி​யாக "நம்​மாழ்​வார் மோட்சம்' நடை​பெ​று​கி​றது. "அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்' என நம்​மாழ்​வார் தமது பாசு​ரத்​தில் அரங்​க​னைப் போற்​று​கி​றார். இவ்​வி​ழா​வில் அரங்​கன் திரு​வ​டி​க​ளில் அமர்ந்து "நம்​மாழ்​வார் மோட்சம்' எனும் வைப​வம் இவ​ருக்​குச் சிறப்​பாக நடை​பெ​று​கி​றது. இவ்​வை​ப​வத்​தில் நம்​பெ​ரு​மாள், தமது மாலை, கஸ்​தூரி திரு​மண்​காப்​பு​களை அவ​ருக்கு அளிக்​கும் காட்சி அற்​பு​த​மா​னது. தன்னை சரண் அடைந்​த​வர்​க​ளுக்கு இறை​வன் தன்​னையே அளிப்​பான் என்​பது இவ்​வி​ழா​வின் தத்​து​வ​மாக விளங்​கு​கி​றது.

பக்தி மணம் பரப்​பும் செந்​த​மிழ் மலர்​க​ளாக ஆழ்​வார் அரு​ளிய பாசு​ரங்​கள் விளங்​கு​கின்​றன. வைகுண்ட ஏகா​த​சித் திரு​வி​ழா​வில் நம் பெரு​மாள் முன்பு பாசு​ரங்​களை அரை​யர்​கள் பாடி அபி​ந​யம் செய்​கின்​ற​னர். இதை "அரை​யர் சேவை' எனக் கூறு​வர். திரு​வ​ரங்​கத்​தில் நடை​பெ​றும் "வைகுண்ட ஏகா​த​சித் திரு​விழா' தெய்​வத் தமிழ் திரு​வி​ழா​வாக நடை​பெ​று​கி​றது.

தொல்​லி​யல் துறை (ஓய்​வு).​

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com