
தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (டிச. 19 - 25) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
தொழிலை விரிவுபடுத்த பயணங்களைச் செய்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் ஊழியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். வியாபாரிகள் புதிய முதலீடுகளைச் செய்து லாபமடைவீர்கள். விவசாயிகள் மாற்றுப்பயிர்களைப் பயிரிடுவீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சி ரகசியங்களை வெளியில் பேசவேண்டாம். கலைத்துறையினர் சக கலைஞர்களுக்கு முன்னுதாரணமாக நடப்பீர்கள். பெண்கள் கடின உழைப்புக்கு நடுவே தக்கநேரத்தில் ஓய்வெடுப்பீர்கள். மாணவர்கள் வெளிவிளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - டிசம்பர் 19
தொழிலில் புதிய இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு செயலாற்றுவீர்கள். சிக்கனமாக இருந்து சேமிப்புகளைக் கூட்டிக் கொள்வீர்கள். அரசு விஷயங்களில் இருந்த தாமதம் விலகும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகச் சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். வியாபாரிகள் புதிய முறையில் கடையை அலங்கரிப்பீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும்.
அரசியல்வாதிகளின் மீதான வதந்திகள் மறையும். கலைத்துறையினர் பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். பெண்கள் யோகா, பிராணாயாமம் போன்றவற்றைக் கற்றுக் கொள்வீர்கள். மாணவர்கள் உடற்பயிற்சியில் தவறாது ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - டிசம்பர் 20, 21
மனக்குழப்பம், சஞ்சலங்களில் இருந்து விடுபடுவீர்கள். கவனம் சிதறாமல் உழைப்பீர்கள். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் புதிய வேலைக்கு மாறுவீர்கள். வியாபாரிகள் சில சலுகைகளை அறிவித்து லாபத்தை மேம்படுத்துவீர்கள். விவசாயிகள் புதிய சந்தையில் பொருள்களை விற்பீர்கள்.
அரசியல்வாதிகள் கடினமாக உழைத்து கட்சியில் புதிய பதவிகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும். பெண்கள் கணவனை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். மாணவர்கள் தங்களின் தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - டிசம்பர் 22, 23, 24.
தொழில் சீராகவே நடக்கும். வாக்குறுதி கொடுக்கும்போது கவனமாக இருப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் கடுமையாக உழைத்துப் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் எதிலும் அகலக்கால் வைக்காமல் வியாபாரத்தை நடத்துவீர்கள். விவசாயிகள் புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள்.
அரசியல்வாதிகள் மற்றவர்களிடம் பேசும்போது சிந்தித்துப் பேசுவீர்கள். கலைத்துறையினருக்கு கிடைக்கும் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும். பெண்கள் குடும்பத்தின் மேன்மையைக் காப்பாற்றுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம் - டிசம்பர் 25.
தொழிலில் மேன்மை உண்டாகும். வருமானத்தில் படிப்படியான உயர்வுகளைக் காண்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களிடம் இருந்த அவநம்பிக்கைகள் அகலும். வியாபாரிகள் கூட்டாளிகளின் உதவியுடன் கடன்களை அடைத்துவிடுவீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளைத் தேடிப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் தொலைதூரச் செய்திகளால் ஆனந்தம் அடைவீர்கள். கலைத்துறையினர் அசதிகள் நீங்கி சுறுசுறுப்புடன் கலைப்பணிகளில் ஈடுபடுவீர்கள். பெண்களுக்கு வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்துக்குத் தேவையானவைகளை வாங்கி மகிழ்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளைச் சுறுசுறுப்புடன் செய்து நற்பெயர் எடுப்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் லாபகரமாக இருக்கும். விவசாயிகள் கால்நடைப் பராமரிப்புகளுக்கு செலவு செய்வீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு ஊக்குவிக்கும். கலைத்துறையினருக்கு பரிசும் கெüரவமும் பதவிகளும் கிடைக்கும். பெண்கள் உடன்பிறந்தோருக்கு உதவிகரமாக இருப்பீர்கள். மாணவர்கள் கடமை உணர்ந்து செயல்படுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாகும். திறமைக்கான மதிப்புகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் வேலைகளை குறித்த நேரத்தில் முடித்துக் கொடுப்பீர்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளில் பொருள்களை விற்பீர்கள். விவசாயிகளுக்கு மகசூலில் லாபம் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் கட்சியின் அனுமதியுடன் பயணங்களை மேற்கொள்வீர்கள். கலைத்துறையினர் துறையில் தங்களின் முழுத் திறமையையும் வெளிப்படுத்துவீர்கள். பெண்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஒற்றுமை மன நிறைவை ஏற்படுத்தும். மாணவர்கள் பெற்றோருக்கு அனுசரணையாக இருப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
உங்கள் காரியங்களில் திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளின் பழைய கடன்கள் வசூல் ஆகும். விவசாயிகள் கால்நடை, பால் வியாபாரத்தில் நன்மை அடைவீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் யோகா, தியானம் போன்றவற்றைச் செய்வீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தொழிலில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் சாதகமாகும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் ஊதிய உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த தாமதங்கள் விலகும். விவசாயிகள் மாற்றுப் பயிர்களால் பயனடைவீர்கள்.
அரசியல்வாதிகள் உள்கட்சி பூசல்களில் ஈடுபட மாட்டீர்கள். கலைத்துறையினர் பொருளாதாரம் உயரக் காண்பீர்கள். பெண்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் சிறப்பாகப் படித்து எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உற்றார், உறவினர்கள் வழியால் ஆதாயம் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்கள் வீண் பேச்சுகளைத் தவிர்த்து வேலையில் கவனம் செலுத்துவீர்கள். வியாபாரிகள் சிறிய அளவில் முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை நாடிப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் சுறுசுறுப்பாக கட்சிப் பணிகளை ஆற்றுவீர்கள். கலைத்துறையினர் சிறு சிறு வாய்ப்புகளால் மீண்டு வருவீர்கள். பெண்களுக்கு கணவன் குடும்பத்தாரிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் விளையாட்டில் வெற்றிவாகை சூடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தொழிலில் புதிய இலக்குகளை எட்டுவீர்கள். போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் கேலிப் பேச்சுக்கு மதிப்பு கொடுக்காதீர்கள். வியாபாரிகள் ரொக்கத்திற்கே வியாபாரம் செய்யுங்கள். விவசாயிகள் கொள்முதலில் லாபத்தைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு உதவி செய்து, அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். கலைத்துறையினர் சவாலான பணிகளையும் துணிந்து செய்து முடிப்பீர்கள்.
பெண்கள் எதிர்காலம் சார்ந்த முடிவுகளையும் எடுப்பீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களிடத்தில் வளைந்து கொடுத்துச் சென்று வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
இனம் புரியாத கவலைகள் தோன்றி மறையும். வரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களின் அலுவலக வேலைகள் தாமதமின்றி நடக்கும். வியாபாரிகளுக்கு கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். விவசாயிகளுக்கு விவசாயப் பணிகள் அனைத்தும் தாமதமின்றி நிறைவேறும்.
அரசியல்வாதிகள் கட்சியில் சாதகமான சூழலைக் காண்பீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைத் தேடிப் பெறுவீர்கள். பெண்களுக்கு வெளியூரிலிருந்து அனுகூலமான செய்திகள் கிடைக்கும். மாணவர்கள் போட்டிகளில் சிறப்பாக தேர்ச்சி அடைவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.