வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

இந்த வாரம் 12 ராசிக்கும் என்னென்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளலாம்...
Weekly predictions
ஜோதிடம்

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (டிச. 26 - ஜன.1) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

1. மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

​தேவையற்ற விஷயங்களில் ஈடுபட மாட்டீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றிவிடுவீர்கள். உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் கருணையுடன் பரிசீலிப்பார்கள்.

வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும்.

அரசியல்வாதிகள் சமூகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள். கலைத்துறையினர் நல்ல நிலையை எட்டி விடுவீர்கள்.

பெண்கள் குடும்ப நலம் சீராகவும் ஒற்றுமையாகவும் இருக்கக் காண்பீர்கள். மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

2. ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

பிரிந்திருந்த உறவினர்கள் குடும்பத்துடன் இணைவார்கள். நோய் நொடிகள் நீங்கும்.

உத்தியோகஸ்தர்களின் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரிகள் வரவு செலவு கணக்குகளைச் சரியாக வைத்துக் கொள்வீர்கள். விவசாயிகளுக்கு பயிர்களில் புழு, பூச்சிகளின் பாதிப்பு சிறிது இருக்கும்.

அரசியல்வாதிகள் பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். கலைத்துறையினர் ஏற்ற இறக்கங்களை சாதுரியமாகச் சமாளிப்பீர்கள்.

பெண்களுக்கு பெற்றோரின் ஆதரவு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் அனைத்து விஷயங்களிலும் சிந்தித்துச் செயலாற்றுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

3. மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

சிலர் புதிய வீட்டுக்கு மாறுவீர்கள். நல்ல செய்தி வந்து சேரும் . குடும்பத்தில் தடைபட்டிருந்த சுபகாரியங்கள் நடக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை கச்சிதமாக முடித்துவிடுவீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தைப் பெருக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.

விவசாயிகள் உழைப்புக்கேற்ற பலன்களைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களிடம் அனுசரித்துச் செல்வீர்கள்.

கலைத்துறையினர் வருமானம் உயரக் காண்பீர்கள். பெண்களுக்கு தனலாபம் உண்டாகும். மாணவர்கள் தேவையில்லாத பிரச்னைகளிலிருந்து விலகிவிடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

4. கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

தன்னம்பிக்கையுடனும் மனோதிடத்துடனும் காரியங்களை ஆற்றுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்துச் செயல்படுவீர்கள்.

விவசாயிகள் புதிய விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் நெருக்கடிகளில் இருந்து தப்பித்துக்கொள்வீர்கள். கலைத்துறையினர் எதிர்பாராத இடங்களிலிருந்து புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

பெண்கள் குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். மாணவர்கள் நண்பர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம்.

சந்திராஷ்டமம் - டிசம்பர் 26.

5. சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

தொழிலில் இருந்த பிரச்னைகள் தானாகவே தீர்ந்துவிடும். குடும்பத்தில் நிம்மதி நிறையும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் அமைதியாகப் பணியாற்றுவீர்கள். வியாபாரிகள் பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள்.

விவசாயிகள் தக்க நேரத்தில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிரிகளாக இருந்தவர்கள் நண்பர்களாக மாறிவிடுவார்கள்.

கலைத்துறையினர் தங்கள் திறமைகளில் புதிய பொலிவைக் காண்பீர்கள். பெண்கள் குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - டிசம்பர் 27, 28.

6. கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

உடன் பிறந்தோரிடம் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வீர்கள். வருமானம் சீராக இருக்கும். அதே நேரம் வீண் செலவு செய்ய வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் எடுப்பீர்கள். வியாபாரிகள் புதிய நிலங்களை வாங்க முயற்சி செய்வீர்கள். விவசாயிகள் சக விவசாயிகளை அரவணைத்துச் செல்வீர்கள்.

அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரின் ரகசியங்களை அறிந்துகொள்வீர்கள். கலைத்துறையினர் புதிய தொழில்நுட்பங்களை அறிந்துகொள்வீர்கள்.

பெண்களுக்கு குடும்பத்தில் மருத்துவச் செலவு குறையும். மாணவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - டிசம்பர் 29, 30.

7. துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

எடுத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். தொழிலில் லாபம் கிடைக்கும். பூர்விக சொத்துகளில் சுமுக பாகப்பிரிவினை உண்டாகும்.

உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். வியாபாரிகளுக்கு கடன் தொல்லைகள் இராது. விவசாயிகள் பயிர் விளைச்சல் முறையில் புதிய மாற்றங்களைக் கொண்டுவருவீர்கள்.

அரசியல்வாதிகள் வெளியூர்களுக்குச் சென்று கட்சிப் பணியாற்றுவீர்கள். கலைத்துறையினருக்கு மேன்மை உண்டாகும்.

பெண்கள் ஆன்மிகத்திலும் தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் நன்றாகப் படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - டிச. 31, ஜனவரி 1.

8. விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள்.

உத்தியோகஸ்தர்களின் முன்னேற்றத்துக்கு சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். வியாபாரிகள் யுக்திகளை மாற்றிக் கொண்டு வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். கலைத்துறையினர் புதிய தொழில்நுட்பங்களை அறிந்துகொள்வீர்கள்.

பெண்கள் குடும்ப உறுப்பினர்களின் உதவிகளைப் பெற்று மகிழ்வீர்கள். மாணவர்கள் சகமாணவர்களுக்கு புரியாத பாடங்களைப் புரிய வைப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

9. தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். நண்பர்களும், உற்றார் உறவினர்களும் அனுசரணையாக இருப்பார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இருந்த கெடுபிடிகள் குறையும். வியாபாரிகள் கடன் கொடுக்காமல் லாபத்திற்கே வியாபாரம் செய்வீர்கள். விவசாயிகள் அதிக மகசூலைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.

பெண்கள் குடும்ப மேன்மையைக் கட்டிக் காப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் முதல் மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

10. மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உடல் ஆரோக்கியம், மனவளம் சிறப்பாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வைக் காண்பீர்கள். வியாபாரிகள் திருப்தியாக வியாபாரத்தை நடத்துவீர்கள். விவசாயிகளுக்கு விவசாயப் பணிகள் சுமுகமாக முடியும்.

அரசியல்வாதிகள் தங்கள் செயல்களை தன் முனைப்புடன் செய்து வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினர் போட்டிகளை சாதுரியமாகச் சமாளிப்பீர்கள்.

பெண்கள் கணவருடன் அன்பு, பாசத்துடன் பழகுவீர்கள். மாணவர்கள் பெற்றோரின் அறிவுரைப்படி நடந்து கொண்டு நற்பெயரெடுப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

11. கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

அதிர்ஷ்டத்தைக் காண்பீர்கள். வருமானம் படிப்படியாக உயரும்.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளை விருப்பு வெறுப்பின்றிச் செய்வீர்கள். வியாபாரிகளுக்கு நேர்முக, மறைமுகத் தொல்லைகள் எதுவும் இராது. விவசாயிகள் பழைய குத்தகைப் பாக்கிகளை உபரி வருமானத்தால் அடைத்துவிடுவீர்கள்.

அரசியல்வாதிகள் சமூகத்தில் மதிப்பான பதவிகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினரின் எண்ணங்கள் பலிதமாகும்.

பெண்கள் குடும்பப் பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செயல்படுவீர்கள். மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவுகளில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

12. மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொருள்களைப் பத்திரப்படுத்திக் கொள்வீர்கள். பயணங்களால் பலன்களை அடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். விவசாயிகள் கால்நடைகளுக்கு சிறிது செலவு செய்ய நேரிடும்.

அரசியல்வாதிகள் இடையூறுகளை சாதுரியமாகச் சமாளிப்பீர்கள். கலைத்துறையினர் விருந்து, கேளிக்கைகளில் கலந்துகொள்வீர்கள்.

பெண்கள் உற்றார், உறவினர்களிடம் அனுசரித்து நடந்துகொள்வீர்கள். மாணவர்களின் அறிவாற்றல் பெருகும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com