தேசம் போற்றும் தேசிகநாத சுவாமி

சூரைக்குடியில் ஆவுடையநாயகி சமேத தேசிகநாத சுவாமி புகழ்பெற்று விளங்குகிறார்.
தேசம் போற்றும் தேசிகநாத சுவாமி
Published on
Updated on
1 min read

சூரைக்குடியில் ஆவுடையநாயகி சமேத தேசிகநாத சுவாமி புகழ்பெற்று விளங்குகிறார். இங்கு காலை பூஜையில் முதலில் சூரியனுக்கு பூஜை செய்யப்பட்டு, பின்பே பிற சுவாமிகளுக்கு பூஜை நடைபெறுகிறது.

"ஒருமுறை பார்வதி தேவியின் தந்தை தட்சண் யாகம் நடத்தினார். இதற்கு சிவனை அழைக்கவில்லை. யாகத்தில் சூரியன் கலந்துகொண்டார். அப்போது சிவன் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பி யாகத்தை நிறுத்தினார். சிவனின் கோபத்துக்கு ஆளான சூரியன், பூலோகம் வந்து இத்தலத்தில் தங்கி விமோசனம் கேட்டு அவரை வழிபட்டார். என தல வரலாறு கூறுகிறது.

சூரியனால் வழிபட்ட தலம், சூரியச் செடிகள் நிறைந்த வனம்.. என்பதால் "சூரியக்குடி' என போற்றப்பட்ட இத்தலம் பிற்காலத்தில் "சூரைக்குடி' என மருவியது.

பைரவர் கையில் சூலத்துடன் காட்சி அளிப்பார். இங்குள்ள பைரவர் சூலத்துக்குப் பதிலாக கதாயுதத்துடன் காட்சி தருவது சிறப்பு. பைரவரே பிரதான மூர்த்தியாவார்.

இங்கு நடைபெறும் ஆனி உத்திர விழாவில் சண்டிகேஸ்வரருக்குப் பதிலாக பைரவர் வீதியுலா செல்வது விசேஷம். கோஷ்டத்தில் யோக தட்சிணாமூர்த்தி சிம்ம மண்டபத்தில் காட்சி தருகிறார். இவரது தலையில் கிரீடம் அணிந்துள்ளது வித்தியாசமான அம்சம்.

நான்கு சிம்மங்கள் கொண்ட பீடத்தில் நந்தி, நான்கு கரங்களுடனும், நெற்றிக்கண்ணுடனும் அம்பாள் காட்சியளிக்கின்றனர். நடராஜர் தெற்கு நோக்கி உள்ளார். நவக்கிரக மண்டபம் உள்ளது. காசி விசுவநாதர், விசாலாட்சி, வள்ளி}தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி, சரஸ்வதி, நால்வர், அறுபத்து மூவர், வட்ட வடிவத்தில் காவல் தெய்வமான முனீஸ்வரர் ஆகிய தெய்வங்கள் உள்ளன.

ஆனந்தமூர்த்தி எனும் பீட வடிவில் உள்ள சுவாமிக்கு மல்லாரி இசை வாசித்து தயிர் சாதம் படைக்கப்படுகிறது. இந்தக் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 2}ஆம் தேதி காலை 11மணிக்கு மேல் நடைபெறுகிறது. இதற்கான பூஜைகள் ஜூன் 29}இல் தொடங்குகிறது. திருமயத்தில் இருந்து சுமார் 10.கி.மீ.தொலைவில் சூரைக்குடி திருத்தலம் அமைந்துள்ளது.

}பொ.ஜெயச்சந்திரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com