சூரியன் வழிபடும் கோயில்

ஒரே கருவறையில் சுவாமியும், அம்மனும் திருமணக் கோலத்தில் காட்சியளிப்பது சிறப்பு.
சூரியன் வழிபடும் கோயில்
Published on
Updated on
1 min read

சிவகங்கையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள இலுப்பக்குடி கிராமத்தில் இலுப்பை, பனை மரங்கள் அடர்ந்த பகுதியில் வாலகுருநாதன், அங்காள ஈஸ்வரி கோயில் உள்ளது. 350 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் வீற்றிருக்கும் சுவாமி, அம்பாளை சிவகங்கை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

ஓலைக் குடிசையில் இருந்த இந்தக் கோயிலை பக்தர்கள் இணைந்து சீரமைத்தனர். ஒரே கருவறையில் சுவாமியும், அம்மனும் திருமணக் கோலத்தில் காட்சியளிப்பது சிறப்பு. 21 வரிசைகளில் ராக்காயி, லாடசன்னாசி, சோணைச்சாமி, இருளாயம்மாள், சப்தகன்னிகள், காளியம்மன், அக்கினி, வீரபத்திரர் ஆகிய தெய்வங்களின் சிலைகள், முச்செல்வ விநாயகர், பாலமுருகன், நவக்கிரகங்கள், துர்கையம்மன், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், நந்தீஸ்வரர், லிங்கோத்பவர் உள்ளிட்ட 31 தெய்வங்களின் உருவச்சிலைகளும் உள்ளன.

இங்கு சிவராத்திரி, குருப் பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, ராகு} கேது பெயர்ச்சி, வர்ணஜபம் உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. ஊமைப்பெண் பேசியது, நோய் நீங்கியது போன்ற அதிசய நிகழ்வுகள் பல இந்த கோயிலில் நடைபெற்றுள்ளதாக இந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆண்டு தோறும் மார்ச் 8 முதல் 20}ஆம் தேதி வரையிலான உத்தராயண காலத்திலும், செப்.17 முதல் 29 }ஆம் தேதி வரையிலான தட்சிணாயன காலத்திலும் அதிகாலை சூரிய உதயத்தில் இருந்து அரை மணி நேரம் மூலஸ்தானத்தில் உள்ள வாலகுருநாதன், அங்காள ஈஸ்வரி மீது சூரியஒளி விழுகிறது. இந்நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்து வருகின்றனர்.

}ஆர். மோகன்ராம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com