
தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (நவ. 7 - 13) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் கவனத்துடன் ஈடுபடுவீர்கள். விவசாயிகளுக்குத் தவறிப்போன குத்தகைகள் திரும்பக் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் கட்சிப்பிரசாரங்களில் தைரியத்துடன் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் சமகால கலைஞர்களை நம்பி முடிவுகளை எடுக்கவேண்டாம். பெண்களுக்குக் குடும்பத்தில் அமைதி உண்டாகும். மாணவர்களுக்குக் கல்வியில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சுறுசுறுப்பாக, திறமையாகப் பணியாற்றுவீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்தி வந்துசேரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு பெருகும். வியாபாரிகளுக்கு வியாபாரத்திலிருந்த மந்தநிலை விலகும்.
விவசாயிகள் சக விவசாயிகளிடமிருந்து ஒதுங்கி நின்று காரியமாற்றுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களிடமிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
பெண்களின் நீண்டகால ஆசைகள் நிறைவேறும். மாணவர்கள் படிப்பில் முழு ஈடுபாட்டைக் காட்டுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தொழிலில் பழைய நெருக்கடிகளிலிருந்து விடுபடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் கடுமையாக உழைத்து நற்பெயரைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் நட்பாகப் பழகுவீர்கள். விவசாயிகள் உரங்களுக்கு அரசு மானியங்களைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் திறமையாகச் செயல்பட்டு கட்சியில் வளர்ச்சியடைவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.
பெண்கள் தங்கள் இல்லத்தில் மருத்துவச்செலவு குறையக் காண்பீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து அகற்றிவிடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் உத்வேகத்துடன் பணியாற்றுவீர்கள். வியாபாரிகள் பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக்கொள்வீர்கள்.
அரசியல்வாதிகள் வம்பு வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். கலைத்துறையினர் தங்கள் செயல்முறைகளை ரசிகர்களின் செயல்முறைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்வீர்கள்.
பெண்கள் குடும்பத்தினரின் குற்றம் குறைகளைப் பெரிதுபடுத்தமாட்டீர்கள். மாணவர்கள் பெற்றோரின் சொல்கேட்டு நடப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
பூர்விகச் சொத்துகளில் சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும். வருமானம் படிப்படியாக உயரும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் மனமறிந்து அலுவலக வேலைகளைச் செய்வீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். விவசாயிகளுக்குப் புழு, பூச்சிகளால் தொல்லை
ஏற்படாது.
அரசியல்வாதிகளுக்குப் பொறுப்புகள் கூடும். கலைத்துறையினர் புதிய கலைகளைக் கற்றுக்கொள்வீர்கள். பெண்கள் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுவருவீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
உங்கள் தன்னம்பிக்கையும் தனித்தன்மையும் உயரும். மனதிற்கினிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரிகள் வெளியூரிலும் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு சக விவசாயிகளின் ஒத்துழைப்பு மேம்படும்.
அரசியல்வாதிகள் தொண்டர்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்குவீர்கள். கலைத்துறையினருக்கு எதையும் சமாளிக்கும் ஆற்றல் கூடும். பெண்களுக்கு உற்றார் உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மாணவர்கள் படிப்பில் ஆர்வத்தைக் கூட்டிக்கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். தெய்வ நம்பிக்கை மேம்படும்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் தடையாக இருந்தவர்கள் விலகி விடுவார்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். விவசாயிகள் சக விவசாயிகளுக்காக சில பொறுப்புகளை ஏற்க வேண்டி வரும்.
அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். பெண்கள் உடன் பிறந்தவரிடம் சுமுகமாக நடந்துகொள்வீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - நவம்பர் 7
புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வேலைக்கு மாறும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரிகள் நேர்முகப் போட்டிகளைச் சந்திப்பீர்கள். விவசாயிகள் புதிய தானியங்களைப் பயிரிடுவீர்கள்.
அரசியல்வாதிகள் தங்கள் காரியங்களில் விவேகத்துடன் செயல்படுவீர்கள். கலைத்துறையினர் தங்கள் திறமைகளை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துவீர்கள்.
பெண்கள் எவரிடமும் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மாணவர்கள் சக மாணவர்களுக்குப் படிப்பில் உதவிகளைச் செய்வீர்கள்.
சந்திராஷ்டமம் - நவம்பர் 8, 9, 10.
எதிர்பார்த்த இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.
வியாபாரிகள் வெளியூர் பயணங்களைச் செய்து வருமானத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் ஊடு பயிர்களைப் பயிரிட்டு லாபமடைவீர்கள்.
அரசியல்வாதிகள் அனைவரிடமும் நட்புடன் பழகுவீர்கள். கலைத்துறையினரின் எண்ணங்கள் அனைத்தும் பூர்த்தியாகும். பெண்கள் ஆன்மிகத்திலும் தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - நவம்பர் 11, 12 .
உங்கள் காரியங்களில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். மற்றவர்களைப் பற்றி குறை கூறிப் பேசுவதைத் தவிர்க்கவும்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கடன் கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் சீரான நிலையைக் காண்பீர்கள். விவசாயிகளுக்குக் குத்தகையில் இருந்த இழுபறிகள் மறையும்.
அரசியல்வாதிகளுக்குக் கட்சியில் முன்னேற புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினருக்கு துறையில் சாதகமான சூழல்கள் ஏற்படும். பெண்களுக்குக் கணவரிடம் புரிதல் ஏற்படும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்
களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - நவம்பர் 13.
மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். ஆரோக்யத்தில் கவனம் செலுத்துவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் இணக்கமாகப் பழகுவீர்கள். வியாபாரிகள் வதந்திகளை நம்ப மாட்டீர்கள். விவசாயிகள் பால் வியாபாரத்தில் கூடுதல் வருமானம் காண்பீர்கள்.
அரசியல்வாதிகள் தொண்டர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள்.
பெண்கள் பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் வெளி விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சிறு தூரப் பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் மறைமுக விமர்சனங்களைப் பெரிதுபடுத்த மாட்டீர்கள். வியாபாரிகள் போட்டிகளை சாதுர்யமாக எதிர்கொள்வீர்கள். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகள் சோர்வு நீங்கி, கட்சிப் பணிகளில் சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். கலைத்துறையினருக்கு ஒருவிதமான படபடப்பு ஏற்பட்டு நீங்கும்.
பெண்கள், கணவர் குடும்பத்தினரை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். மாணவர்கள் பொறுமையுடன் இருந்து தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.