எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்? 12 ராசிகளுக்கும்!

இந்த வாரம் 12 ராசிக்கும் என்னென்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளலாம்...
வார பலன்கள்
வார பலன்கள்

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (நவ. 21 - 27) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

1. மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

எதிர்பாராத நபர்கள் மூலம் சில உதவிகள் பெறுவீர்கள். வங்கிக்கடன்கள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் வேலைப்பளுவைக் குறைப்பீர்கள். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். விவசாயிகள் பயிர்களுக்கு இயற்கை உரங்களைப் பயன்படுத்துவீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கலைத்துறையினர் துறையில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பெண்கள் பெற்றோருக்கு அனுசரணையாக இருப்பீர்கள். மாணவர்கள் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - நவம்பர் 21, 22.

2. ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் விலகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உடன்பிறந்தோருக்கு உதவுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுகமான நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரிகள் வீண் செலவுகளைக் குறைப்பீர்கள். விவசாயிகள் காய், கனிகளைப் பயிரிட்டு லாபமடைவீர்கள். அரசியல்வாதிகள் கட்சிப்பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் ஒப்பந்தங்களைச் சரியாக நிறைவேற்றுவீர்கள். பெண்கள் கணவரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.

சந்திராஷ்டமம் - நவம்பர் 23, 24.

3. மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். கடன்பிரச்னை ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். விவசாயிகளுக்கு சக

விவசாயிகளின் நன்மதிப்பு கிடைக்கும்.

அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். கலைத்துறையினர் தற்பெருமை பேச்சுகளைக் குறைத்துக்கொள்வீர்கள். பெண்கள் உறவினர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - நவம்பர் 25, 26, 27.

4. கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

புதிய நண்பர்கள் அமைவார்கள். முயற்சிகளில் சிறு தாமதம் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைகளில் சிறு படபடப்பு ஏற்பட்டு நீங்கும். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் கருத்துகளைப் பகிரும்போது கவனமாக இருக்கவும். விவசாயிகள் விளைச்சலில் கவனம் செலுத்துவீர்கள்.

அரசியல்வாதிகளுக்குப் பணவரவு அதிகரிக்கும். கலைத்துறையினர் சக கலைஞர்களிடம் அநாவசிய விவாதங்களில் ஈடுபடவேண்டாம். பெண்கள் குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். மாணவர்கள் நண்பர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

5. சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் உபாதைகள் நீங்கும். தொழிலில் மிதமாகச் செயல்படுவீர்கள். வருமானத்துக்குக் குறைவு வராது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் ஆதரவான சூழ்நிலை அமையும். வியாபாரிகள் கடையை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த காரியங்கள் கைகூடும்.

அரசியல்வாதிகளின் திறமை மதிக்கப்படும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பெண்கள் குடும்பத்தில் மதிப்பு, மரியாதை உயரக் காண்பீர்கள். மாணவர்களுக்கு சக மாணவர்களின் ஆதரவு கூடும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

6. கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த பொருள்களை வாங்குவீர்கள். உங்கள் புகழ், கெüரவம் உயரும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளைச் சரியாகச் செய்து முடித்து விடுவீர்கள். வியாபாரிகளுக்கு கமிஷன் விஷயங்களில் ஆதாயம் கிடைக்கும். விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிடுவீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களுக்குத் தக்க அறிவுரைகளைக் கூறுவீர்கள். கலைத்துறையினர் மனதிற்கினிய பயணங்களை மேற்கொள்வீர்கள். பெண்கள் கணவரின் அன்பு, பாசத்தைப் பெறுவீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் கலந்து கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

7. துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

உடல் ஆரோக்கியம், மனவளம் இரண்டும் மேம்படும். உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளைத் திட்டமிட்டு சரியாகச் செய்து முடித்து விடுவீர்கள்.

வியாபாரிகள் வியாபாரத்தில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துவீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வீர்கள். கலைத்துறையினர் துறையில் புத்துணர்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெண்கள் தங்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். மாணவர்கள் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

8. விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு பணியாற்றுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளியுடன் இணக்கமாகப் பழகுவீர்கள். விவசாயிகள் சிறுதானிய பயிர்களைப் பயிரிட்டு வருமானத்தைப் பெருக்குவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சியில் சிறு நெருக்கடிகளைக் காண்பீர்கள். கலைத்துறையினர் துறையில் புதிய நுணுக்கங்களைக் கற்பீர்கள். பெண்களுக்கு சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேலோங்கும். மாணவர்கள் பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

9. தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.

உத்தியோகஸ்தர்கள் சக உத்தியோகஸ்தர்களுடன் நெருக்கமாகப் பழகுவீர்கள். வியாபாரிகள் புதிய இலக்குகளை நோக்கிப் பயணிப்பீர்கள். விவசாயிகளுக்குத் தடைபட்ட விவசாயப் பணிகள் முடிவடையும்.

அரசியல்வாதிகள் வெளியூர் சென்று கட்சிப்பணிகளைச் செய்வீர்கள். கலைத்துறையினர் துறையில் முழு ஈடுபாட்டைக் காட்டுவீர்கள். பெண்கள் புதிய ஆடை, அணிமணிகள் வாங்குவீர்கள். மாணவர்கள் தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

10. மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

தடையாக இருந்தவர்களால் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள்.

வியாபாரிகள் அரசு விவகாரங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். விவசாயிகளுக்கு கால்நடைப்பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் துணிவுடன் செயல்படுவீர்கள். கலைத்துறையினருக்கு துறையில் உயர்ந்தவர்களின் சந்திப்பு உண்டாகும். பெண்களுக்கு உடன் பிறந்தோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரைகளால் மாற்றங்களைக் காண்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

11. கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

வருமானம் படிப்படியாக உயரும். தேவையற்ற செலவுகளைக் குறைப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் நற்பெயர் எடுப்பீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் சக விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.

அரசியல்வாதிகள் மனதுக்குப் பிடித்த விதத்தில் கட்சிப் பணியாற்றுவீர்கள். கலைத்துறையினருக்கு துறையில் மதிப்பு, மரியாதை உயரும். பெண்கள் குடும்பத்தில் மழலைச் செல்வம் உண்டாகக் காண்பீர்கள். மாணவர்களுக்குக் கல்வியில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

12. மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொருளாதாரம் சீராக இருக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களால் புதிய அனுபவங்கள் ஏற்படும். வியாபாரிகள் விலை உயர்ந்த பொருள்களை வாங்கி விற்பனை செய்வீர்கள். விவசாயிகளுக்கு உழைப்புக்குத் தக்க ஊதியம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் கவனத்துடன் செயல்படுவீர்கள். கலைத்துறையினர் துறையில் மேன்மையைக் காண்பீர்கள். பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com