வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

இந்த வாரம் 12 ராசிக்கும் என்னென்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளலாம்...
வார பலன்கள்
வார பலன்கள்

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (அக். 17 - 23) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

1. மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். பூர்விக சொத்து லாபம் தரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் அலுவலகத்தில் புதிய மாற்றங்கள் வரும். வியாபாரிகள் விற்பனையில் சிந்தித்துச் செயல்படுவீர்கள். விவசாயிகள் விவசாய உபகரணங்களைப் பழுது பார்ப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு பிரச்னைகள் படிப்படியாகக் குறையும். கலைத்துறையினருக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெண்களுக்கு மனதில் இருந்த சஞ்சலமான சிந்தனைகள் குறையும். மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

2. ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

ஓய்வில்லாமல் சுறுசுறுப்பாக உழைப்பீர்கள். செல்வாக்கு உயரும். தொழிலில் சிறப்பான அனுபவங்கள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரிகள் மறைமுகப் போட்டிகளைச் சாதுர்யமாக எதிர்கொள்வீர்கள். விவசாயிகள் பழைய பாக்கிகளைத் திருப்பிச் செலுத்துவீர்கள்.

அரசியல்வாதிகளுக்குப் பயணங்களால் சிறிது அலைச்சல் உண்டாகும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். பெண்கள் பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். மாணவர்கள்

வெளி விளையாட்டுகளில் வெற்றி காண்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

3. மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

உங்கள் செயல்கள் சாதனைகளாக மாறும். வருமானம் இரட்டிப்பாகும்.

உத்தியோகஸ்தர்கள் கடினமான பணிகளையும் சுலபமாகச் செய்து முடித்துவிடுவீர்கள். வியாபாரிகள் புதிய புதிய கூட்டாளிகளுடன் சேர்ந்து வியாபாரம் செய்வீர்கள். விவசாயிகள் மற்ற விவசாயிகளுக்கு தக்க உதவிகளைச் செய்வீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். கலைத் துறையினர் சூழ்நிலைக்கேற்ப ஊதியத்தை நிர்ணயிப்பீர்கள். பெண்கள் சரியான நேரத்தில் ஆகாரத்தை எடுத்துக் கொள்வீர்கள். மாணவர்கள் புதிய இலக்குகளை நிர்ணயித்துப் படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

4. கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். தொழிலில் லாபம் அடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பயணங்கள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சமநிலையைக் காண்பீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகள் தங்கள் குரல் உயரக் காண்பீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களுடன் ஒற்றுமையாகப் பழகுவீர்கள். பெண்கள் புதிய ஆடை அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

5. சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

எடுத்த காரியங்களை எப்படியாவது முடித்துவிடுவீர்கள். குடும்பத்தில் புத்திரப்பேறு உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் வேலைகளைப் பகிர்ந்துகொள்வீர்கள். வியாபாரிகளின் ஆசைகள் நிறைவேறும். விவசாயிகள் விளைச்சலில் மேன்மையைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சி ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டாம். கலைத்துறையினர் துறையில் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களிடம் பணிவாக நடந்துகொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

6. கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

உற்றார் உறவினர்கள் உங்களிடம் அனுசரணையாக இருப்பார்கள். தொழிலை சீரும் சிறப்புமாக நடத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் உண்மை முகத்தைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் கவனத்துடன் இறங்குவீர்கள். விவசாயிகள் பாசன வசதிகளைப் பெருக்கிக்கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்குப் புதிய பொறுப்புகள் வந்து சேரும். கலைத்துறையினர் புதுமைகளைச் செய்வீர்கள். பெண்மணிகள் சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெற்று, பள்ளிக்குப் பெருமை சேர்ப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

7. துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

உடல் நலம், மனவளம் இரண்டும் சிறப்பாக இருக்கும். உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நல்ல முறையில் பேசிப் பழகுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். விவசாயிகளின் உழைப்புக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். கலைத்துறையினர் தங்கள் கடமையை உணர்ந்து செயல்படுவீர்கள். பெண்கள் குடும்பப் பெரியவர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் தவறான நண்பர்களிடமிருந்து விலகிவிடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

8. விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குடும்பத்திலும் மேன்மை உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் கடினமான வேலைகளையும் சரியாகச் செய்துவிடுவீர்கள். வியாபாரிகளுக்கு வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். விவசாயிகள், பால் வியாபாரம் செய்வோர் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளை மேலிடம் கூர்ந்து கவனிக்கும். கலைத்துறையினருக்கு புதிய கலைஞர்கள் நண்பர்கள் ஆவார்கள். பெண்கள் கணவர் வழி உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வீர்கள்.

மாணவர்கள் பெற்றோர்களின் வழிகாட்டுதல்படி நடந்து கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

9. தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

புதிய சாதனைகளைச் செய்வீர்கள். குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிதாக எவருக்கும் கடன் கொடுக்க மாட்டீர்கள். விவசாயிகள் மாற்றுப் பயிர்களையும் காய்கறிகளையும் பயிரிடுவீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களை உற்சாகப்படுத்துவீர்கள். கலைத்துறையினர் வெளியூர் சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். பெண்கள் குடும்பத்தில் மதிப்பு மரியாதையை உயர்த்திக் கொள்வீர்கள்.

மாணவர்கள் அதிகம் பாடுபட்டு படித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

10. மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

நல்லோர் ஆதரவு தொடரும். உடல் உபாதைகள் நீங்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பயணங்களில் புதிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு மறைமுகப் போட்டிகள் இருக்காது. விவசாயிகள் குத்தகைப் பாக்கிகளைத் திருப்பிச் செலுத்தி விடுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்குப் பொதுச் சேவையில் சாதனை செய்ய சந்தர்ப்பங்கள் தேடி வரும். கலைத்துறையினருக்கு வருமானம் சிறப்பாக இருக்கும். பெண்கள் ஆன்மிகத்திலும் தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள்.

மாணவர்கள் உற்சாகத்துடன் வெளி விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - அக்டோபர் 17, 18.

11. கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் தங்களது அலுவலக அறிவைப் பகிர்ந்து கொள்வீர்கள். வியாபாரிகள் வெளியூர்களுக்குச் சென்று வியாபாரம் செய்வீர்கள். விவசாயிகள் புதிய சந்தையை நாடுவீர்கள்.

அரசியல்வாதிகள் எதிர்க்கட்சிகளின் ரகசிய நடவடிக்கைகளைக் கண்காணிப்பீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள். பெண்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள்.

மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் கலந்துகொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - அக்டோபர் 19, 20.

12. மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மன அழுத்தங்களில் இருந்து விடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளை குறித்த நேரத்திற்கு முன்பாகவே முடித்துவிடுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் தரமான விதைகளை வாங்கிப் பயிரிடுவீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களை அனுசரித்துச் செல்வீர்கள். கலைத்துறையினர் ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள். பெண்கள் குழந்தைகளுக்காக எதிர்காலச் சேமிப்புத் திட்டங்களில் சேருவீர்கள்.

மாணவர்கள் சக மாணவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.

சந்திராஷ்டமம் - அக்டோபர் 21, 22, 23.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com