
தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (அக். 31 - நவ. 6) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
முயற்சிகள் நல்ல பலனைத் தரும். பணவசதி அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலைகளைத் திறம்படச் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகளுக்குக் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக முடியும். விவசாயிகளுக்கு தோட்டம், தோப்பு உள்ளிட்ட பணிகள் அனைத்தும் சுமுகமாக முடியும்.
அரசியல்வாதிகளுக்கு கட்சியில் எதிர்ப்பு தோன்றினாலும் கௌரவத்திற்குப் பங்கம் வராது. கலைத்துறையினர் உற்சாகமான மனநிலையில் பணியாற்றுவீர்கள். பெண்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையக் காண்பீர்கள். மாணவர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை
தொழிலில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகளிடத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக இருப்பார்கள்.
விவசாயிகளுக்கு தானிய உற்பத்தியிலும் நல்ல லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் தங்கள் செயல்களை வெளிப்படையாகச் செய்வீர்கள். கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை முடித்துக்கொடுத்து புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்களுக்குத் திருமணம் ஏற்பாடாகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை
பணவரவு இரட்டிப்பாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிராகச் சதிசெய்தவர்கள் அடங்கிவிடுவார்கள். வியாபாரிகளின் பேச்சுக்குக் கூட்டாளிகள் மதிப்பு கொடுப்பார்கள். விவசாயிகள் இடைத்தரகர்களைத் தவிர்த்து நேரடியாக விற்பனை செய்வீர்கள்.
அரசியல்வாதிகள் தங்கள் ரகசியங்களை எவரிடமும் வெளியிட வேண்டாம். கலைத்துறையினருக்குக் கைநழுவிப்போன வாய்ப்புகள் திரும்பக் கிடைக்கும். பெண்கள் உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வீர்கள். மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவுகளில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை
ஆரோக்கியம் சீராக இருக்கும். ஆன்மிகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொழிலில் புதிய நுணுக்கங்களைப் புகுத்துவீர்கள். உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். வியாபாரிகள் வண்டி வாகனப் பராமரிப்புக்குச் சிறிது செலவு செய்வீர்கள். விவசாயிகளுக்குப் புதிய குத்தகைகள் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் எவரிடமும் கட்சி ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். கலைத்துறையினருக்கு வருமானம் சிறப்பாக இருக்கும். பெண்கள் வயிறு சம்பந்தமான பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். மாணவர்கள் நண்பர்
களிடம் வீண்வாக்குவாதம் வேண்டாம்.
சந்திராஷ்டமம் - அக்டோபர் 31, நவம்பர் 1
நம்பிக்கையானவர்களின் ஆலோசனை மாற்றத்தைக் கொண்டு சேர்க்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவாக நடந்துகொள்வார்கள். வியாபாரிகள் சக வியாபாரிகள் மத்தியில் நல்ல பெயரெடுப்பீர்கள். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகளின் பேச்சுக்குத் தொண்டர்களின் வரவேற்பு அதிகரிக்கும். கலைத்துறையினர் சக கலைஞர்களுடன் நெருக்கமாக இருப்பீர்கள். பெண்கள் தெய்வ வழிபாட்டைக் கூட்டிக்கொள்வீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - நவம்பர் 2, 3, 4
அரசுப்பணிகளில் ஆதாயம் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான திருப்பங்களைக் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளைத் திட்டமிட்டுச் செய்து முடித்துவிடுவீர்கள். வியாபாரிகள் சங்கங்களில் பொறுப்புகளைப் பெறுவீர்கள். விவசாயிகள் புதிய மாற்றுப் பயிர்களைப் பயிரிடுவீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்திடம் பார்த்து நடந்துகொள்வீர்கள். கலைத்துறையினர் தங்கள் கடமையை உணர்ந்து செயல்படுத்துவீர்கள். பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவர்கள் விளையாட்டில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம் - நவம்பர் 5
தொழிலை சிறப்பாக விரிவுபடுத்துவீர்கள். எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊக்கத்தொகை கிடைக்கும். வியாபாரிகள் உழைப்பைக் கூட்டிக்கொண்டு முன்னேறுவீர்கள். விவசாயிகள் பால் வியாபாரத்தால் கூடுதல் வருமானத்தைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் தொண்டர்களை அரவணைத்துச் செல்வீர்கள். கலைத்துறையினர் துறையில் புதிய நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள் . பெண்கள் புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். மாணவர்கள் அதிகாலை எழுந்து படித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - நவம்பர் 6
பழைய கடன்கள் வசூலாகும். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகச் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு வெளியிலிருந்து புதிய முதலீடுகள் கிடைக்கும். விவசாயிகள் மாற்றுப்பயிர்களைப் பயிரிட்டு லாபமடைவீர்கள்.
அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரிடம் கவனமாக நடந்துகொள்வீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களை ஊக்கப்படுத்துவீர்கள். பெண்கள் கணவர் குடும்பத்தாருடன் அன்பு, பாசத்துடன் பழகுவீர்கள். மாணவர்கள் கல்வியில் தீவிர ஆர்வம் காட்டுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை
புதிய துறைகளில் அதிரடியாக நுழைவீர்கள். வெளிநாட்டுத் தொடர்பு ஆக்கம் தரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத பதவிகள் தேடிவரும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் மேன்மையைக் காண்பீர்கள். விவசாயிகள் விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரிடமும் நட்பாக இருப்பீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க அதிக முயற்சிகள் செய்ய நேரிடும். பெண்கள் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். மாணவர்களுக்கு பழைய முயற்சிகள் இப்போது கைகொடுக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை
புத்திசாலித்தனமும் ஞாபகசக்தியும் கூடும். குழந்தைகளின் முன்னேற்றத்துக்குப் பாடுபடுவீர்கள். தியானம், பிராணாயாமம் கற்றுக்கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் நன்றாகச் சிந்தித்து முதலீடுகளைச் செய்யவும். விவசாயிகள் தரமான விதைகளை விதைப்பீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்துக்குச் சரியான தகவல்களை அனுப்புவீர்கள். கலைத்துறையினருக்கு பெயர், புகழ் கூடும். பெண்கள் அனாவசிய விஷயங்களில் தலையிட வேண்டாம். மாணவர்கள் சக மாணவர்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை
குடும்பத்தினருடன் அனுசரித்து நடந்துகொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் கடமையுணர்ந்து பணியாற்றுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் சீரான நிலையைக் காண்பீர்கள். விவசாயிகள் கொள்முதலில் எதிர்பார்த்த லாபத்தைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகள் தங்கள் குறைகளை குறைத்துக்கொண்டு பணியாற்றுவீர்கள். கலைத்துறையினர் துறையில் உயர்ந்தவர்களின் நன்மதிப்புக்குள்ளாவீர்கள். பெண்கள் தங்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் மதிப்பெண்களை அள்ளுவீர்கள் .
சந்திராஷ்டமம் - இல்லை
பெற்றோரின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். தொழிலில் இருந்த தடை, தாமதம் விலகும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கடையை அழகுபடுத்தி வாடிக்கையாளர்
களைக் கவருவீர்கள். விவசாயிகள் பழைய குத்தகைப் பாக்கிகளை அடைத்துவிடுவீர்கள்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஒத்துழைப்பால் மேன்மையடைவீர்கள். கலைத்துறையினர் கவனமாக இருந்து போட்டிகளைச் சமாளிப்பீர்கள். பெண்கள் ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் கூடும்.
சந்திராஷ்டமம் - இல்லை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.