வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
weekly predictions
வார பலன்கள்

1. மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

தொழிலில் லாபம் கிட்டும். சுபகாரியங்கள் சிறப்பாக நடந்தேறும். மனதிற்கினிய பயணம் மேற்கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் கருணையுடன் பரிசீலிப்பார்கள். வியாபாரிகள் பொறுமையாக இருந்து வியாபாரம் செய்வீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும்.

அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலம் காண்பீர்கள். கலைத்துறையினர் நல்ல நிலையை எட்டிவிடுவீர்கள். பெண்மணிகள் குடும்ப நலம் சீராகவும் ஒற்றுமையுடன் இருக்கக் காண்பீர்கள். மாணவ மணிகள் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

2. ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

பொருளாதாரம் சீராகச் செல்லும். பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். மனபயம், குழப்பம் விலகிவிடும். செயலில் வெற்றி கிட்டும்.

உத்தியோகஸ்தர்களுக்கு தடைகள் விலகிவிடும். வியாபாரிகள் சரியான கணக்குகளை அரசுக்குச் சமர்ப்பீர்கள். விவசாயிகள் பயிர்களில் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வருமானம் படிப்படியாய் உயரும். பெண்மணிகளுக்கு தனலாபம் உண்டாகும்.

மாணவ மணிகள் எதையும் சிந்தித்துச் செயலாற்றுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

3. மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

உங்கள் சமயோஜித புத்தி இக்கட்டான தருணங்களில் கைகொடுக்கும். வயிறு சம்பந்தமான நோய்கள் தீரும்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளை கச்சிதமாகச் செய்வீர்கள். வியாபாரிகளுக்கு புதிய முயற்சியால் வியாபாரம் பெருகும். விவசாயிகள் உடலுழைப்புக்கேற்ற பலன்களைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களிடம் பொறுமைக்காப்பீர்கள். கலைத்துறையினர் எதிர்பாராத புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெண்மணிகள் குடும்பத்திற்காக விட்டுக்கொடுப்பீர்கள். மாணவ மணிகள் தேவையில்லாத பிரச்னைகளிலிருந்து விலகியிருப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - செப்டம்பர் 5

4. கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

குடும்பத்தில் நிம்மதி நிறையும். சமுதாயத்தில் உங்கள் பெயர், கௌரவம் கூடும்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஊழியர்களின் அன்பும் ஆதரவும் தொடர்ந்து கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படுவீர்கள். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் நெருக்கடியான சூழ்நிலைகளிலிருந்து விடுபடுவீர்கள். கலைத்துறையினர் தங்கள் திறமைகளில் புதுப்பொலிவைக் காண்பீர்கள். பெண்மணிகள் குழந்தைகளால் சந்தோஷமடைவீர்கள். மாணவ மணிகள் நண்பர்களிடம் அதிகம் நெருங்காமல் பழகவும்.

சந்திராஷ்டமம் - செப்டம்பர் 6, 7, 8.

5. சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

புதிய வாகனங்களை வாங்குவீர்கள். தொழிலில் தடைகளைத் தகர்ப்பீர்கள். புதிய இலக்குகளை எட்டுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் அமைதியாகப் பணியாற்றுவீர்கள். வியாபாரிகளுக்கு பழையகடன்கள் அடைபடும். விவசாயிகள் விளைச்சலில் மேன்மையைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு மாற்றுக்கட்சியினரும் நண்பர்களாக மாறுவார்கள். கலைத்துறையினருக்கு பயணங்களால் நன்மை. பெண்மணிகளுக்கு உடல், மனநலம் இரண்டும் சிறப்பாக இருக்கும். மாணவ மணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - செப்டம்பர் 9, 10.

6. கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றிக்கொள்வீர்கள். காரியங்களில் வளர்ச்சி உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் கடன்களைப் பெறுவீர்கள். வியாபாரிகள் விற்பனையில் புதிய அணுகுமுறையைப் புகுத்துவீர்கள். விவசாயிகள் இயற்கை உரங்களைப் பயன்படுத்துவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் நலனைப் பேணுவீர்கள். பெண்மணிகள் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். மாணவ மணிகள் வெளி விளையாட்டுகளில் திறமையை நிரூபிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - செப்டம்பர் 11.

7. துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குழந்தைகளை நல்லமுறையில் வளர்ப்பீர்கள். பயணங்களை மேற்கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு நிர்வாகத்திறமை வெளிப்படும். வியாபாரிகள் வியாபாரம் சார்ந்த முடிவுகளைத் தள்ளிவைக்கவும். விவசாயிகளுக்கு சக விவசாயிகளிடம் ஒற்றுமை கூடும்.

அரசியல்வாதிகளுக்கு புதிய தொண்டர்கள் கிடைப்பார்கள். கலைத்துறையினருக்கு சில வாய்ப்புகள் தேடி வரும். பெண்மணிகள் பெற்றோரிடம் அனுசரித்து நடந்துகொள்வீர்கள். மாணவ மணிகளின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை

8. விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பேச்சுத்திறமையால் காரியங்களைச்சாதிப்பீர்கள். வங்கிக்கடனால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும்.

உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வு காண்பீர்கள். வியாபாரிகள் திருப்திகரமாக வியாபாரத்தை நடத்துவீர்கள். விவசாயிகளுக்கு பணிகள் அனைத்தும் சுமுகமாகவே நடக்கும்.

அரசியல்வாதிகளின் கனவுகள் நனவாகும். கலைத்துறையினர் போட்டி,பொறாமைகளைக் காண்பீர்கள். பெண்மணிகள் கணவரிடம் அன்பு, பாசத்துடன் பழகுவீர்கள். மாணவ மணிகள் பெற்றோரின் அறிவுரைப்படி நடந்துகொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

9. தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

அனைத்துக் காரியங்களிலும் புத்திசாலித்தனமாக நடந்துகொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளை விருப்பு வெறுப்பின்றிச் செய்வீர்கள். வியாபாரிகளுக்கு தொல்லைகள் எதுவும் ஏற்படாது. விவசாயிகள் பழைய குத்தகை பாக்கிகளை உபரி வருமானத்தால் அடைத்துவிடுவீர்கள்.

அரசியல்வாதிகள் தங்கள் செயல்களால் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினரின் முயற்சிகள் வெற்றி இலக்கை எட்டும். பெண்மணிகள் குடும்பப் பொறுப்பைச் செயல்படுத்துவீர்கள். மாணவ மணிகளின் படிப்பில் சுலபமாக வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

10. மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

புதிய பொறுப்புகளில் ஆர்வமுடன் பணியாற்றுவீர்கள். மனக்கவலை மறையும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வீர்கள். விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளைச் சரியான நேரத்தில் பயன்படுத்துவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சியில் மதிப்பான பதவிகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் விருந்து,கேளிக்கைகளில் கலந்துகொள்வீர்கள். பெண்மணிகள் உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். மாணவ மணிகள் அறிவாற்றலைப் பெருக்கிக்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

11. கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

தொழிலில் புதிய பாதைகள் புலப்படும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். விவாதங்களைக் குறைத்துக்கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்வீர்கள். வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களை நாடிச்செல்வீர்கள். விவசாயிகள் பாசனவசதிகளில் கவனம் செலுத்துவீர்கள்.

அரசியல்வாதிகள் இடையூறுகளைத் தகர்த்தெறிவீர்கள். கலைத்துறையினருக்கு பெயர், புகழ் கூடும். பெண்மணிகள் ஆன்மிகத்தில் மனதைச் செலுத்துவீர்கள். மாணவ மணிகள் சில அதிஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

12. மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

புதிய வீடு, மனை வாங்க முன்பணம் கொடுப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் வேலைப்பளுவை திட்டமிட்டுச் செயலாற்றி முடித்துவிடுவீர்கள். வியாபாரிகளுக்கு கூட்டாளிகளின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும். விவசாயிகளுக்கு தானிய விற்பனையின் மூலம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் அன்புத் தொல்லைக்கு ஆளாவீர்கள். பெண்மணிகள் புதிய வருமானத்தால் சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். மாணவ மணிகள் விளையாட்டுகளில் சாதனை செய்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com