தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

மன்னனுக்கு மணிமுடி...

மலை மீது அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த சிவதலம் அய்யர்மலை அருள்தரும் சுரும்பார்குழலி சமேத ரத்தினகிரீசுவரர் கோயில்.

Published On :13 பிப்ரவரி 2026, 12:36 pm IST

மலை மீது அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த சிவதலம் அய்யர்மலை அருள்தரும் சுரும்பார்குழலி சமேத ரத்தினகிரீசுவரர் கோயில். இறைவன் சுயம்பு மூர்த்தம். பாடல் பெற்ற சிவாலயங்களில் இது 64-ஆவது தேவார திருத்தலம்.

மன்னன் ஒருவன் தமது நவரத்தின கிரீடம் காணாமல் போனதால் ஈசனைத் துதிக்க, வயதான அந்தணர் ஒருவர் ரத்தினகிரீசுவரரிடம் அந்த கிரீடம் உள்ளதாய் தெரிவிக்க, மன்னன் ரத்தினகிரீசுவரரிடம் வந்து தமது மணிமுடியைத் தருமாறு வேண்டினார். வேதியர் வடிவில் வந்த இறைவன், இங்குள்ள கொப்பரையை முழுமையாக காவிரி நீர் கொண்டு நிரப்பினால் மணிமுடியைத் தருவதாகச் சொல்ல, மன்னன் எவ்வளவோ முயன்றும் கொப்பரை நிரம்பாததால் கோபம் கொண்டு வேதியரை வாளால் வெட்ட முயற்சித்தார்.

வேதியர் சிவலிங்கத்துக்குள் மறைய, வெட்டு லிங்கத்தில் பட்டு குருதி பீறிட்டது. தெய்வக் குற்றத்துக்கு ஆளானதை எண்ணி அஞ்சிய மன்னன் தன்னைத் தானே வெட்டிக்கொள்ள முயற்சிக்க, இறைவன் அவனைத் தடுத்து ஆட்கொண்டு மணிமுடியையும் கொடுத்தருளினார். சுவாமி மேல் வெட்டுத் தழும்பு உள்ளதை இன்றும் காணலாம்.

கோயில் கல்வெட்டுகளில், "இறைவர் மாணிக்க மலை மகாதேவர், மாணிக்க மலை உடைய நாயனார், திருமாணிக்க மலை உடைய தம்பிரான் ஆனார். இறைவி திருக்காம கோட்டமுடைய பெரிய நாச்சியார்' என்ற திருநாமங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இங்குள்ள பொன்னிடும் பாறைக்கு முன்புறம் உள்ள கம்பத்தைச் சுற்றி நூலால் கட்டி பில்லி, சூனியம், ஏவல், பல்வேறு தடைகள் நீங்க பிரார்த்தனை செய்யப்படுகிறது.

திருப்பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, பிப்ரவரி 22}ஆம் தேதி காலை 8 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

கரூர்-திருச்சி சாலை குளித்தலையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அய்யர்மலை அமைந்துள்ளது.

- பொ.ஜெயச்சந்திரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.