

உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்டில் ஏறிய முதல் இந்திய பெண் மாற்றுத்திறனாளி என்ற பெருமையை அருணிமா சின்ஹா பெற்றுள்ளார்.
முன்னாள் தேசிய வாலிபால் வீராங்கனையான அருணிமா கடந்த 2011-ம் ஆண்டு லக்னெüவில் இருந்து தில்லிக்கு ரயிலில் சென்றபோது சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.
பலத்த காயமடைந்ததால் அவரது இடது காலை மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி விட்டனர். இந்நிலையில் தொடர் முயற்சியின் விளைவாக அருணிமா செவ்வாய்க்கிழமை காலை உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டில் ஏறிய முதல் இந்திய பெண் மாற்றுத்திறனாளி என்ற பெருமையைப் பெற்றார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த அருணிமா கூறியதாவது: ஒரு காலை இழந்த பின் என்னைப் பார்த்து அனைவரும் வேதனைப்பட்டனர். என்னை பரிதாபமாக பார்ப்போர் மத்தியில் ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என எண்ணினேன். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்கள் குறித்து அறிந்தேன்.
எனது மூத்த அண்ணனும், பயிற்சியாளரும் ஊக்கம் தந்தனர். டாடா சாகசப் பயிற்சி மையத்தில் கடந்த ஆண்டு மலை ஏறும் பயிற்சிக்காக சேர்ந்த அருணிமாவுக்கு எவரெஸ்ட் சிகரத்தை முதலில் ஏறிய இந்திய பெண்ணான பச்சேந்தரி பால் பயிற்சி அளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.