ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

சிறையிலிருக்கும் 20 விடுதலைப் புலிகளை விடுவிக்க இலங்கை முடிவு

பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 20 விடுதலைப் புலிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது

Updated On :26 நவம்பர் 2015, 12:45 pm

பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 20 விடுதலைப் புலிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 59 பேரில், குறைவான புகாருக்குள்ள 20 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என இலங்கை நீதித்துறை அமைச்சர் விஜயதச ராஜபக்ச கூறினார்

இலங்கையின் பாதுகாப்பு குறித்த முன்னாள் அதிபர் ராஜபக்சவின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த அமைச்சர் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு முழு பொறுப்பேற்றுள்ளது என்றார்.

இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இதுவரை 204 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 124 பேர் வழக்குகளை சந்தித்து வரும் நிலையில் 24 பேர் மீதான வழக்கு இன்னும் விசாரணைக்கு வரவில்லை.

சில நாள்களுக்கு முன்பு பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள், தங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அதிபர் சிறீசேனா அளித்த வாக்குறுதியை தொடர்ந்து அவர்கள் தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

இந்நிலையில் இலங்கை அரசு 20 விடுதலைப் புலிகளை விடுதலை செய்வதாக இன்று அறிவித்துள்ளது.  இது சிங்களவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.