செப்டம்பர் 27-ல் முகநூல் தலைமையகத்தை பார்வையிடகிறார் பிரதமர் மோடி

செப்டம்பர் 27 ஆம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள முகநூல் (பேஸ்புக்) தலைமையகத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட உள்ளார்.
செப்டம்பர் 27-ல் முகநூல் தலைமையகத்தை பார்வையிடகிறார் பிரதமர் மோடி
Updated on
1 min read

செப்டம்பர் 27 ஆம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள முகநூல் (பேஸ்புக்) தலைமையகத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட உள்ளார்.

இது குறித்து முகநூல் நிறுவனரும், உலகின் முன்னணி பில்லினியர்களில் ஒருவருமான மார்க் ஜூக்கர்பெர்க் கூறுகையில், கடந்த ஆண்டு இந்தியாவுக்கு நான் சென்றிருந்த போது பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இப்போது பேஸ்புக் தலைமை செயல் அலுவலகத்துக்கு பிரதமர் வருகை தர இருக்கிறார் என்கிற அறிவிப்பை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சியும் கெளவுரவமும் அடைகிறேன்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகிற 27 ஆம் தேதி முகநூல் (பேஸ்புக்) தலைமையகத்திற்கு வர இருக்கிறார். இந்த சந்திப்பின் போது கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்க்க உள்ளார். இதற்கான உங்கள் கேள்விகளை இந்த அறிக்கைக்கு கீழே பதிவு செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

மார்க்கின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் தங்கள் கேள்விகளை மார்க்கின் அறிக்கைக்கு கீழே பதிவிட்டு வருகின்றனர். மோடியின் இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியின் வீடியோ மார்க்கின் முகநூல் பக்கத்திலும் பிரதமரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்திலும் பதிவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. பொது சபை கூட்டம் இந்த மாதம் 25 முதல் 27 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com