வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

மாஸ்கோ மணல் சிற்ப போட்டி: தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் சுதர்சன் பட்நாயக்

மாஸ்கோ மணல் சிற்ப போட்டியில், இந்தாண்டு பரிசை தட்டிச் சென்றுள்ளார் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்.

News image
Updated On :28 ஏப்ரல் 2016, 7:05 am

மாஸ்கோ (ரஷ்யா): மாஸ்கோ மணல் சிற்ப போட்டியில், இந்தாண்டு பரிசை தட்டிச் சென்றுள்ளார் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்.

2016-ம் ஆண்டுக்கான 9-வது மாஸ்கோ மணல் சிற்ப போட்டி ஏப்ரல் 21 முதல் 27 வரை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.

உலக அளவில் முதல் 20 இடங்களில் இருக்கும் புகழ்பெற்ற மணல் சிற்பக்  கலைஞர்களும், சர்வதேச அளவில் 50 மணல் சிற்பக் கலைஞர்களும் இவ்விழாவில் பங்கேற்றனர்.

இதில், மகாத்மா காந்தியின் படத்தை 15 அடி உயரத்தில் அகிம்சை மற்றும் சமாதான செய்தியைச் சித்தரிக்கும் வகையில் உலக அமைதி என்று மணலில் வடிவமைத்து, இந்தாண்டுக்கான தங்கப்பதக்கத்தை வென்று பட்நாயக் சாதனை படைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.