'போக்மான் கோ' என்ற பிரபலமான அலைபேசி விளையாட்டை விளையாடியதன் மூலம் இங்கிலாந்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தங்கள் அலைபேசியை பறிகொடுத்த தகவல் தெரிய வந்துள்ளது.
'போக்மான் கோ' என்பது பிரபலமான அலைபேசி செயலி வடிவிலமைந்த விளையாட்டு.இது கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ப்ளே ஸ்டோர்களில்கிடைக்கிறது. கணிப்பொறியினால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு பிம்பத்தை, பயனீட்டாளரின் நேரடியான பார்வையில் இருப்பது போன்ற தோற்றத்தை (ஆக்மெண்டட் ரியாலிட்டி) உருவாக்கும் ஒரு விளையாட்டு.
பயனீட்டாளரின் அலைபேசியில் உள்ள ஜி.பி.எஸ் வசதியை, கூகுள் மேப்ஸ் வசதியுடன் இணைத்து இது செயல்படும். இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு இடத்தில் கணிப்பொறி பிம்பம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். அதை பயனீட்டாளர் தன்னுடைய அலைபேசியின் மேற்கூறிய இரு வசதிகள் மற்றும் கேமரா துணை கொண்டு கொண்டு தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்பதே விளையாட்டு.
இந்த விளையாட்டு கடந்த வியாழனன்று பிரிட்டனில் அறிமுகம் செய்யப்பட்டது. உடனே அது வெகுவாக பிரபலமடைந்து வருகிறது.
இந்நிலையில் 'போக்மான் கோ' விளையாடி அலைபேசியை இழந்த 3 மாணவர்கள் பற்றிய விபரத்தை இங்கிலாந்தின் பிரபல 'டெலிக்ராப்' நாளிதழ் வெளியிட்டுள்ளது.
அதன்படி இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியில் உள்ள ஹுல்ம் என்ற இடத்தில் இந்த விளையாட்டை விளையாடிக் கொண்டே, தனியான ஒரு இடத்திற்கு சென்ற மூன்று மாணவர்களிடம் இருந்து, கொள்ளையர்கள் கத்தி முனையில் அலைபேசியை பறித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மான்செஸ்டர் நகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. காவல்துறை கண்காணிப்பாளர் ஜோன் ரவ்லின்சன் கூறுகையில், "நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி குற்றச்செயல்கள் புரிவதில் குற்றவாளிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். போக்மான் கோ விளையாட்டு அவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பாக அமைந்துள்ளது.எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இது குறித்து எச்சரிகை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Strong Room-ல் வாக்குப்பதிவு எந்திரங்கள்! சீல் வைத்துப் பாதுகாப்பு!

வாக்குப்பதிவு சதவிகிதம்! வியப்பதற்கு ஒன்றுமில்லை!
அதிக கவனம்பெறும் தேனி வாக்குச்சாவடி! 5 பேரில் வாக்களித்தது எத்தனை பேர்?

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மீனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


