
வாஷிங்டன்: மக்களின் அடிப்படை உணர்வுகளை டொனால்ட் டிரம்ப் புறக்கணித்துவிட்டார் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு, வடக்கு கரோலினா மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "பயத்தை புறக்கணித்து விடுங்கள், நம்பிக்கையை தேர்வு செய்யுங்கள்" என்று சூசகமாகக் கூறினார்.
அதோடு, சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்றும், குற்றவாளி என்றும் டிரம்பை மறைமுகமாக தாக்கிப் பேசிய ஒபாமா, நாம் ஒற்றுமையாக பலமாக இருக்க வேண்டும் என்றால் இதுபோன்றவர்களை அமெரிக்க அதிபராக தேர்வு செய்யக் கூடாது என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.