கொடூர சர்வாதிகாரி பிடல் காஸ்ட்ரோ: விஷத்தை கக்கிய டிரம்ப்!

மறைந்த கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ ஒரு கொடூர சர்வாதிகாரி என அமெரிக்க அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
கொடூர சர்வாதிகாரி பிடல் காஸ்ட்ரோ: விஷத்தை கக்கிய டிரம்ப்!

நியூயார்க்: மறைந்த கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ ஒரு கொடூர சர்வாதிகாரி என அமெரிக்க அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவின் அருகேயுள்ள சிறிய தீவு நாடு கியூபா. இந்நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ. நீண்ட காலமாக உடல் நலம் இல்லாமல் இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 90. கியூபாவின் புரட்சிகர மக்கள் தலைவராக விளங்கிய அவர், அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு அடிபணியாமல்  அந்த நாட்டிற்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்.

பிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளனர். ஆனால் அமெரிக்காவின் புதிய அதிபராக  தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் பிடல் காஸ்ட்ரோவை ஒரு கொடூர சர்வாதிகாரி என கடுமையான வார்த்தையால் குற்றம் சாட்டியுள்ளார்.

பிடல் காஸ்ட்ரோவின் மரண செய்தி முறைப்படி வெளியானவுடன் டொனால்டு டிரம்ப் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர்  தெரிவித்துள்ளதாவது;

கியூபா நீண்ட காலமாக அனுபவித்து வந்த துன்பம் மற்றும் துயரத்தில் இருந்து இன்று மீண்டுவிட்டது. பிடல் காஸ்ட்ரோ ஒரு கொடூர சர்வாதிகாரியாக திகழ்ந்தார். இனி எதிர்காலத்தில் கியூபா மக்கள் சுதந்திரத்துடனும், செல்வ செழிப்புடனும் வாழ வழி பிறந்து விட்டது

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தங்களது ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுத்து போர்க்கொடி உயர்த்திய பிடல் காஸ்ட்ரோவை கொல்ல அமெரிக்கா 638 தடவை முயற்சித்தது. இருந்தும் அவர் உயிர்தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

54 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த வருடம் அமெரிக்க அதிபர் ஒபாமா, கியூபாவுடன் தூதரக உறவுகளை உண்டாக்கி நல்லுறவை ஏற்படுத்தினார். ஆனால் பழைய வன்மத்துடன் ட்ரம்ப் தற்போது விஷத்தைக் கக்கியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com