ஆஸ்திரேலியாவில் எரித்துக் கொல்லப்பட்ட இந்திய வம்சாவழி டிரைவர்!
ஆஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த இந்திய வம்சாவளி டிரைவர் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சிட்னி: ஆஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த இந்திய வம்சாவளி டிரைவர் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மன்மீத் அலிஷேர் என்பவர் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் பஞ்சாபி இனத்தை சேர்ந்தவராவார். இவர் நேற்று தனது பணியில் இருந்த போது, பேருந்திலிருந்து பயணி ஒருவரால் உயிருடன் தீ வைத்து கொளுத்தப்பட்டார். இந்த கொடூர சம்பவம் பேருந்து பயணிகள் அனைவரின் கண் முன்னால் நடைபெற்றது என்பது அதிர்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. .
இந்த கொடூர சம்பவத்தை செய்த 48 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கொலைக்காண காரணம் என்ன என்பது தெரியவில்லை என்று அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...