வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

வெடித்துச் சிதறிய சாம்சங் ஸ்மார்ட்போன்: ஆஸ்திரேலியரின் விரலில் காயம்!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஹோட்டல் அறை  ஒன்றில் சார்ஜ் போடப்பட்டிருந்த சாம்சங் ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறியதால், உரிமையாளர் கையில் தீக்காயம் ஏற்பட்டது.    

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:13 pm

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஹோட்டல் அறை  ஒன்றில் சார்ஜ் போடப்பட்டிருந்த சாம்சங் ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறியதால், உரிமையாளர் கையில் தீக்காயம் ஏற்பட்டது.    

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா  மாகாணத்தைச் சேர்ந்தவர் தம் ஹுவா. இவர் மெல்போர்ன் நகரத்துக்கு சுற்றுப்பயணம் செய்த பொழுது அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் அறை  எடுத்து தங்கியிருந்தார். அங்கு இரவு படுக்கும் பொழுது தன்னுடைய சாம்சங் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட்போனுக்கு 'சார்ஜ்' போட்டு விட்டு படுத்தார்.

அதிகாலை அவர் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது நெருப்பு பிழம்புகளுடன் அவருடைய போன் வெடித்துச் சிதறியதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் அவரது  படுக்கையறை விரிப்பு மற்றும் தரை கம்பளம் ஆகியவை எரிந்து விட்டிருக்கின்றன.

இது தொடர்பாக தம் ஹுவா சாம்சங் நிறுவனத்தை தொடர்பு கொண்ட பொழுது ஆஸ்திரேலியாவில் இது போல நடப்பது இதுதான் முதல்முறை என்று வருத்தம் தெரிவித்த அந்நிறுவனம், ஹோட்டல் நிர்வாகத்துக்கு ஹுவா  செலுத்த வேண்டிய 1300 ஆஸ்திரேலிய டாலருக்கு தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக  கூறியுள்ளது. 

இந்தவருடம் ஆகஸ்ட் 19 -ஆம் தேதி இந்த வகை ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டது முதல், இதுவரை போன் வெடித்தாக 35 சம்பவங்கள் உலகம் முழுவதும் புகார் செய்யயப்பட்டுள்ளன என்பது நினைவு கூறத்தக்கது.

தொடர்ச்சியான புகார்களால், இந்தவகை போன்களை சந்தையிலிருந்து திரும்ப பெற்றுக் கொள்வதாக சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிவிப்பு செய்திருந்தது. மாற்று ஏற்பாடு பற்றி அறிவிப்பு செய்யப்பபடும் வரை வாடிக்கையாளர்கள்  தாங்கள் வாங்கிய கடைகளில் போன்களை திருப்பி அளிக்கவும் அந்நிறுவனம் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.