
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள வணிகமையம் ஒன்றில் சனிக்கிழமை நிகழ்ந்த தொடர் கத்திக்குத்து சம்பவத்தில் 8 பேர் காயமடைந்தனர்
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள செயின்ட் க்ளவுட் சிட்டியில் அமைந்துள்ளது க்ராஸ்ரோட்ஸ் வணிக மையம். சனிக்கிழமை இரவு 8.30 மணி அளவில், அங்கே நுழைந்த ஒருவன் அங்கிருந்தவர்கள் மீது தன்னிடம் இருந்த கத்தியால் சரமாரியாக தாக்குதல் நடத்தினான். இதில் எட்டு பேர் காயம் அடைந்தனர்.
அப்பொழுது அங்கே வந்த மற்றொரு பகுதியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி அந்த குற்றவாளியை சுட்டு வீழ்த்தினார்.
சம்பவம நடந்த செயின்ட் க்ளவுட் சிட்டி பகுதியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி, 'குற்றவாளி தனியார் நிறுவன காவல் அதிகாரி போல ஆடை அணிந்திருந்தான் என்றும்; சம்பவத்திற்கான காரணம் குறித்து எதுவும் தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.