'ஏலியன் விரட்டும் வேலைவாய்ப்பு'- நாசா அறிவிப்பு...!

வேற்று கிரக வாசிகளை விரட்டும் புதிய வேலைவாய்ப்பு பணிக்காக விண்ணப்பம் கோரியுள்ளது அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம்.
'ஏலியன் விரட்டும் வேலைவாய்ப்பு'- நாசா அறிவிப்பு...!

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, புதிய வேலைவாய்ப்புக்கான வி்ண்ணப்பத்தை வியாழக்கிழமை வெளியிட்டது. அதில், ஏலியனிடம் இருந்து பூமியை காப்பதற்கான அதிகாரி தேவைப்படுகிறார் என்றிருந்தது.

நாச வெளியிட்ட அந்த வேலைவாய்ப்பானது 'Planetary Protection Officer' அதாவது பூமியை காக்க அதிகாரிகள் தேவை என்ற காலிப்பணியிட விவரம் வெளியிடப்பட்டது.

அதில், வேற்று கிரக வாசிகளாகக் கருதப்படும் ஏலியன்களிடம் இருந்து பூமியை பாதுகாக்க வேண்டும் என்றிருந்தது. இந்த காலிப்பணியிடத்துக்கான வேலைவாய்ப்பு தொடர்பான விண்ணப்பம் தற்சமயம் அமெரிக்காவில் வெளியாகியுள்ளது.

இந்த காலிப்பணியிடத்துக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 14-ந் தேதியாகும்.

இதுகுறித்து அமெரிக்க விண்ணவெளி ஆய்வு மைய உறுப்பினர் ஒருவர் கூறுகையில்:

வேற்று கிரகவாசிகளிடம் இருந்து இந்த பூமியை காத்திட வேண்டும். விண்வெளியில் உள்ள ரோபாட் மற்றும் மனிதர்களிடம் சரியான புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் எவ்வித இடர்பாடுகளும் இன்றி சுமூகமாக இருக்க வேண்டும் தேவையற்ற தகவல் பரிமாற்றங்களும், தவறான தகவல்கள் வெளியாவதையும் தவிர்க்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com