
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, 'Planetary Protection Officer' (பூமியை காக்க அதிகாரிகள் தேவை) என்ற வேலைவாய்ப்புக்கான காலிப்பணியிட விவரத்தை வெளியிட்டது. அதில், ஏலியனிடம் இருந்து பூமியை காப்பதற்கான அதிகாரி தேவைப்படுகிறார் என்றிருந்தது.
இந்த காலிப்பணியிடத்துக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 14-ந் தேதி என குறிப்பிட்டிருந்தது.
இதுகுறித்து அமெரிக்க விண்ணவெளி ஆய்வு மைய உறுப்பினர் ஒருவர் கூறுகையில்:
வேற்று கிரகவாசிகளிடம் இருந்து இந்த பூமியை காத்திட வேண்டும். விண்வெளியில் உள்ள ரோபாட் மற்றும் மனிதர்களிடம் சரியான புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் எவ்வித இடர்பாடுகளும் இன்றி சுமூகமாக இருக்க வேண்டும் தேவையற்ற தகவல் பரிமாற்றங்களும், தவறான தகவல்கள் வெளியாவதையும் தவிர்க்க வேண்டும் என்றார்.
தற்சமயம் இந்தக் காலிப்பணியிடத்துக்காக ஜாக் டேவிஸ் என்ற 9 வயது சிறுவன் விண்ணப்பித்துள்ளான். அவனுடைய அந்த விண்ணப்பம் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏனெனில் அதில் அச்சிறுவன் குறிப்பிட்ட காரணங்களே ஆகும்.
அச்சிறுவன் எழுதிய கடிதத்ததில் கூறியதாவது:
நான் ஜாக் டேவிஸ், 'Planetary Protection Officer' என்ற காலிப்பணியிடத்துக்காக விண்ணப்பித்துள்ளேன். எனக்கு 9 வயதே ஆனாலும் இப்பணியை சிறப்புடன் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஏனெனில் நான் ஒரு ஏலியன் என்று எனது சகோதரி அடிக்கடி கூறிக்கொண்டிருப்பாள். நானும் நிறைய ஏலியன் திரைப்படங்ளைப் பார்த்திருக்கிறேன். 'மார்வெல் ஏஜென்ட்ஸ் ஆஃப் ஷீல்ட்' என்ற நாடகத் தொடரையும் விடாமல் பார்த்து வருகிறேன். மென் இன் பிளாக் திரைப்படத்தை விரைவில் காணவுள்ளேன். விடியோ கேம்ஸ் விளையாடுவதில் நான் கில்லாடி. நான் சிறுவின் என்பதால் அனைத்தையும் மிக விரைவாக கற்றுக்கொள்வேன். இப்படிக்கு, தங்கள் உண்மையுள்ள ஜாக் டேவிஸ், கார்டியன் ஆஃப் தி கேலக்ஸி, ஃபோர்த் கிரேட் என்றிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.