ஆண்களை விட பெண்களின் மூளை படு சுறுசுறுப்பு!: ஆய்வில் தகவல்

ஆண்களைக் காட்டிலும் பெண்களின் மூளை அதிக சுறுசுறுப்புடன் செயல்படுவது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
ஆண்களை விட பெண்களின் மூளை படு சுறுசுறுப்பு!: ஆய்வில் தகவல்
Published on
Updated on
1 min read

ஆண்களைக் காட்டிலும் பெண்களின் மூளை அதிக சுறுசுறுப்புடன் செயல்படுவது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
மறதி நோயான அல்சீமர் நோய் தொடர்பான அறிவியல் இதழில் வெளியிட்டப்பட்ட அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
46,034 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் ஆண்û மற்றும் பெண் இருபாலருக்கிடையிலான மூளை செயல்பாட்டில் அளவிடத்தக்க வேறுபாடுகள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. குறிப்பாக, ஒரு விஷயத்தை உற்றுநோக்குதல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல், மனநிலை மற்றும் கவலை ஆகியவற்றின் வெளிப்பாடுகளில் ஆணின் மூளையைக் காட்டிலும் பெண்ணின் மூளை மிகத் தெளிவாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த ஆய்வின் மூலமாக, இருபாலருக்குமான மூளையில் உள்ள வேறுபாடுகளை அளவிடுவதன் மூலம் அல்சீமர் போன்ற மூளை தொடர்பான நோய்கள் ஆண், பெண்ணை எவ்வாறு தாக்குகின்றன ? அதனால் அவர்களுக்கு ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் மூளை தொடர்பான நோய்கள் ஆண், பெண் இருபாலரை வெவ்வேறு விதமாக தாக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் பெரும்பாலும் அல்சீமர், மன அழுத்தம், ஆகியவற்றால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அதேசமயம், ஆண்கள் நடத்தை தொடர்பான பிரச்னைகளால் அதிகம் பாதிப்படைகின்றனர்.
ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களின் முன்பக்க மூளை (பிரிஃப்ரோன்டல் கார்டெக்ஸ்) பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்போது, பச்சாதாபம் மிகுதல், உள்ளுணர்வு, சுயக் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றில் மிகவும் உறுதியானவர்களாக உள்ளனர் என்பது தெரிகிறது.
அதேபோன்று, பெண்களின் மூளையில் உள்ள லிம்பிக் பகுதியில் ரத்த ஓட்ட அதிகரிப்பின்போது, மன அழுத்தம், தூக்கமின்மை, உணவு உட்கொள்வதில் சீரற்ற தன்மை, கவலை எழுவதையும், அவற்றால் அவர்கள் ஏன் அதிக பாதிப்புக்குள்ளாகின்றனர் என்பது குறித்தும் ஓரளவுக்கு விவரிக்க முடியும். பொதுவாக ஆண்களை விட பெண்களின் மூளை படு சுறுசுறுப்புடன் இயங்குகிறது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com