

புதன்கிழமை பிற்பகல் 122 பயணிகளுடன் காணாமல் போன மியான்மர் இராணுவ விமானம் அந்தமான் கடலில் பல சடலங்களுடன் சேதமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மயைக் நாட்டின் தெற்கு நகரத்திலிருந்து யாங்கனிற்கு இந்த விமானம் பயணித்துக் கொண்டிருந்தது.
மியான்மாரில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் காணாமல் போன இராணுவ விமானத்தைத் தேடும் பணி இரவு முழுவதும் இராணுவ கப்பல் மற்றும் விமானங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது. இந்த விமானத்தில் இராணுவ அதிகாரிகளின் குழந்தைகளும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 15 குழந்தைகள், 58 பெரியவர்கள் மற்றும் 35 இராணுவ வீரர்களும் இந்த விமானத்தில் பயணித்துள்ளனர்.
இதுவரை விமானம் விபத்துக்குள்ளான காரணம் அறியப்படவில்லை. விமானத்தின் கறுப்புப் பெட்டியை மீட்டெடுத்த பின்பே அதைப்பற்றிய விவரங்கள் தெரியவரும் என்று விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
விமானம் புறப்பட்டு 29 நிமிடங்களுக்குப் பிறகு அந்தமான் கடல் பகுதியில் 18,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் பொழுது தகவல் தொடர்பை இழந்துள்ளது. அதனால் விமானத்தில் என்ன பழுது ஏற்பட்டது என்ற தகவல் கட்டுப்பட்டு அறைக்கு வரவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.