நீங்கள் எங்கள் பக்கமா? இல்லை கத்தார் பக்கமா? பாகிஸ்தானைக் கேட்கும் சவுதி

நீங்கள் எங்கள் பக்கமா? இல்லை கத்தார் பக்கமா? என்று சவுதி மன்னர் சல்மான், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீங்கள் எங்கள் பக்கமா? இல்லை கத்தார் பக்கமா? பாகிஸ்தானைக் கேட்கும் சவுதி
Updated on
1 min read


இஸ்லாமாபாத்: நீங்கள் எங்கள் பக்கமா? இல்லை கத்தார் பக்கமா? என்று சவுதிமன்னர் சல்மான், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கத்தார் நாட்டுடனான தூதரக உறவை 6 நாடுகள் துண்டித்துக் கொண்டதை அடுத்து ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க கல்ஃப் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நவாஸ் ஷெரிப்ஃபிடம் இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை ஜெடாஹ்வில் நடைபெற்ற கூட்டத்தின் போது, கத்தார் விவகாரத்தில் பாகிஸ்தான் எந்த பக்கம் என்பது குறித்து உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் மிகவும் சாமர்த்தியமாக தனது அடுத்தகட்ட நகர்த்தல்களை செய்து வருவதாகவும், பாகிஸ்தான் தங்கள் பக்கம் நிற்க வேண்டும் என்று கல்ஃப் நாடுகள் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே சமயம், கல்ஃப் நாடுகளுக்கு இடையேயான தனது நல்லுறவைப் பயன்படுத்தி, எண்ணெய் வளம் நிறைந்த கத்தார் நாட்டு விவகாரத்தில் சமரசம் செய்து வைக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. அதற்காகவே, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். அவருடன் பாகிஸ்தான் ராணுவ தளபதி கமார் ஜாவேத் பஜ்வா மற்றும் மூத்த அதிகாரிகளும் சென்றுள்ளனர்.

குவைத், கத்தார், துருக்கி நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட நவாஸ் ஷெரிப்ஃபின் இந்த பயணத்தால் உடனடியாக எந்த பயனும் கிடைத்ததாக தெரியவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com