பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லை திறப்பு

ஒரு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லை வழி செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.
Updated on
1 min read

ஒரு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லை வழி செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.
இதுகுறித்து பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
இஸ்லாமாபாதில் பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து இரண்டு நாடுகளின் எல்லைப் பகுதிகளும் மூடப்பட்டன.
இந்த நிலையில், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளைத் திறக்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டார். அதற்கான கடிதம் திங்கள்கிழமை கிடைக்கப்பெற்றதையடுத்து இருநாடுகளின் எல்லைகளும் மீண்டும் திறக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, நீண்ட நாட்கள் முடங்கியிருந்த சரக்குப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. பாகிஸ்தானிலிருந்து நூற்றுக்கணக்கான லாரிகள் எல்லையைக் கடந்து ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தன.
பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் அளிப்பதாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com