ஏலத்துக்கு வருகிறது டாவின்ஸியின் இயேசு ஓவியம்: ரூ.650 கோடி வரை விலை போகும் என எதிர்பார்ப்பு

புகழ்பெற்ற பிரான்ஸ் நாட்டு ஓவியர் லியோனார்டோ டாவின்ஸி வரைந்த இயேசு ஓவியம், அமெரிக்காவில் ஏலத்துக்கு விடப்படவுள்ளது.
ஏலத்துக்கு வருகிறது டாவின்ஸியின் இயேசு ஓவியம்: ரூ.650 கோடி வரை விலை போகும் என எதிர்பார்ப்பு

புகழ்பெற்ற பிரான்ஸ் நாட்டு ஓவியர் லியோனார்டோ டாவின்ஸி வரைந்த இயேசு ஓவியம், அமெரிக்காவில் ஏலத்துக்கு விடப்படவுள்ளது.
அந்த நாட்டின் கிரிஸ்டீஸ் ஏல மையம், மிகவும் அரிதான அந்த ஓவியத்தை நியூயார்க் நகரில் அடுத்த மாதம் 15-ஆம் ஏலத்துக்கு விடவுள்ளது.
டாவின்ஸியால் வரையப்பட்ட ஓவியம் என்று ஒப்புக்கொள்ளப்பட்ட, தனியார் வசமிருக்கும் கடைசி ஓவியம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
'உலகின் ரட்சகர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஓவியம், சுமார் 1500-ஆம் வரையப்பட்டது எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கிரிஸ்டீஸ் ஏல நிறுவனம் தெரிவித்ததாவது:
ஸ்படிக உலக உருண்டையை கையில் வைத்து, இயேசுபிரான் ஆசி வழங்குவதைப் போல காட்சியளிக்கும் 'உலகின் ரட்சகர்' ஓவியம் பிரிட்டன் மன்னர் முதலாம் சார்லஸிடம் இருந்து வந்தது. தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் பிரிட்டன் நாடாளுமன்றம் அவருக்கு 1649-ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றிய பிறகு, அவரிடமிருந்த பொருள்களின் பட்டியலில் இந்த ஓவியமும் இடம் பெற்றிருந்தது.
எனினும், 1973-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஒவியத்தைப் பற்றிய தகவல் இல்லாத நிலையில், பிரிட்டன் கடல் பயண ஆய்வாளர் ஜேம்ஸ் குக் சேகரித்திருந்த அரும்பொருள்களில் ஒன்றாக அந்த ஓவியம் இருந்தது 1900-ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 1958-ஆம் ஆண்டு இந்த ஒவியத்தை ஒருவர் வெறும் 45 பவுண்டுகளுக்கு (ரூ.3,800) வாங்கிச் சென்றார். 
இந்த நிலையில், அடுத்த மாதம் ஏலத்துக்கு வரவிருக்கும் 'உலகின் ரட்சகர்' ஓவியம், 10 கோடி டாலருக்கு (சுமார் ரூ.650 கோடி) விலைபோகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் மிகப் புகழ்பெற்ற ஒரு ஓவியரால் வரையப்பட்ட, உலகில் மிகவும் போற்றப்படும் ஒரு உருவத்தைக் கொண்ட அந்த ஓவியத்தை ஏலத்துக்கு விடுவதில் பெருமையடைகிறோம் என்று கிரிஸ்டீஸ் ஏல நிறுவனம் தெரிவித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com