உலகின் மிகப் பெரிய டைனோசரின் காலடித் தடம் இதுதான்!

டைனோசர் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமான பிராணி.
உலகின் மிகப் பெரிய டைனோசரின் காலடித் தடம் இதுதான்!
Published on
Updated on
1 min read

டைனோசர் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமான பிராணி. அது வாழ்ந்த காலகட்டத்தைப் பற்றிய ஆராய்ச்சிகளும், புனைவுகளும், டைனோசர் குறித்த அச்சங்களும், கதைகளும் திரைப்படங்களும் எண்ணிலடங்காதவை. இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கை உலகப் புகழ் பெற வைத்ததில் டைனோசருக்கும் முக்கிய பங்கு உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்தளவுக்கு ஜுராஸிக் பார்க் படம் உலக ரசிகர்களைக் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் ஐந்தாம் பாகம் வரை வெவ்வேறு இயக்குநர்களின் கைவண்ணத்தில் வெளிவந்து திரை ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது உலகில் மிகப் பெரிய டைனோசரின் காலடித் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடம் ஸ்காட்லாண்ட் அருகில் உள்ள ஸ்கை தீவுக் கூட்டத்தில் உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதற்கு முன்னர் பொலிவியா உள்ளிட்ட உலகின் சில பகுதிகளில் டைனோசர்களின் காலடித் தடத்தை கண்டு பிடித்தனர். ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த காலடித் தடம் அளவில் மிகப்பெரியது. 50-க்கும் மேற்பட்ட காலடித்தடங்கள் கற்களாக மாறியிருப்பதாகவும், இவற்றின் வயது சுமார் 170 மில்லியன் ஆண்டுகள் இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறினர். ஜூராசிக் காலத்தின் மத்திய காலப் பகுதியில் டி-ரெக்ஸ் எனப்படும் இந்த வகை டைனோசர்களின் காலடித்தடம் வெவ்வெறு அளவுகளில் கிடைத்திருப்பதால் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்படும் என்று எடின்பர்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்டீவ் புரூசாட் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com