ஹாரி பாட்டர் படத்தில் நடித்த வெர்னெ ட்ராயர் திடீர் மரணம்!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகர் வெர்னெ ட்ராயர் உடல் நலக் குறைவால் நேற்று
ஹாரி பாட்டர் படத்தில் நடித்த வெர்னெ ட்ராயர் திடீர் மரணம்!
Published on
Updated on
1 min read

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகர் வெர்னெ ட்ராயர் உடல் நலக் குறைவால் நேற்று (ஏப்ரல் 21) திடீரென மரணம் அடைந்தார். வெர்னெ ட்ராயர் (Verne Troyer) 1994-ம் ஆண்டு வெளிவந்து சர்வதேச புகழ்ப் பெற்ற படமான ‘பேபிஸ் டே அவுட்’ திரைப்படத்தில் குழந்தையாக நடிக்கத் தொடங்கி அதன் பின் கடந்த 24 வருடங்களாக ஹாலிவுட்டில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

81 செண்டிமீட்டர் உயரம் மட்டுமே கொண்ட வெர்னே ட்ராயர் உலகின் மிகக் குள்ள மனிதராவார். 49 வயதாகும் அவரது உருவத்தின் அளவு தான் குறைவானதே தவிர அவருடைய புகழின் அளவு மிக அதிகம் என்று வாழ்ந்து காட்டியவர் வெர்னெ ட்ராயர். ஹாரி பாட்டர் படத்தில் நடித்தபின் உலகின் மூலை முடுக்கெல்லாம் மிகவும் பிரபலமானார். அப்படத்தில் காப்ளின் க்ரிப்ஹுக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அவர்.

வெர்னெ ட்ராயர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த செய்தியறிந்த ஹாலிவுட் நடிகர்கள் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ட்விட்டரில் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

சில விஷமிகள் அவரது உருவம் குறித்து கிண்டலாக சில பதிவுகள் போட்டதை கண்டனம் தெரிவித்து பலரும் அதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளனர். ஒரு மனிதர் எப்படி இருந்தால் என்பதைவிட எப்படி வாழ்ந்தார் என்பதை தான் நாம் பார்க்க வேண்டும். அவ்வகையில் வெர்னே ட்ராயர் நல்ல நடிகராக, நகைச்சுவை உணர்வு மிக்கவராக திகழ்ந்தார். மேலும் தன்னம்பிக்கை மிகுந்தவராகவும் பாசிட்டிவ் எண்ணங்கள் உடையவராகவும் அவர் வாழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com