
காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றில், வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இரண்டு மனித வெடிகுண்டுகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி பாக்தியா மாகாணம் அமைந்துள்ளது. இங்குள்ள கார்தேஷ் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் வழக்கமான வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது இரண்டு மனித வெடிகுண்டுகள் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர். இந்த தாக்குதலில் 20 பேர் பலியாகியுள்ளனர்.
காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பலரது நிலை மோசமாக உள்ளதன் காரணமாக பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கொடூர தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.