காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே நடந்த பயங்கர துப்பாக்கிச் சண்டையில் 50 பேர் பலினார்கள்.
இதுபற்றி அரசாங்கத் தரப்பில் கூறப்படுவதாக சின்ஹுவா தொலைக்காட்சி கூறுவதாவது
தாலிபான் தீவிரவாதிகள் திங்கள்கிழமை இரவு அஸ்ரா மாவட்டம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நுழைந்த உடன் இந்த துப்பாக்கிச் சண்டை துவங்கியது.
தீவிரவாதிகள் மாவட்டத்தின் மையப் பகுதியில் புகுந்தவுடன், நாங்கஹார் மாகாணத்தை ஒட்டிய மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இந்தத் துப்பாக்கிச் சண்டையில் மரணமடைந்த ராணுவ வீரர்களின் உறுதியான எண்ணிக்கை குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.