
நியூ யார்க்: பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்குகிறது. எனவே அந்நாட்டுக்கு அமெரிக்கா ஒரு டாலர் கூட நிதியுதவி வழங்கக் கூடாது என்று ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உயர் பதவியில் நியமிக்கப்பட்ட முதல் இந்திய - அமெரிக்கரான ஹாலே, அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் எந்த நாட்டுக்கும், நிதியுதவி செய்யக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நாம் எந்த நாட்டுடன் கூட்டணி அமைத்துள்ளோமோ அது தொடர்பாக முறையாக சிந்தித்து செயல்பட வேண்டும். சில விஷயங்களில் இணைந்து செயல்பட வேண்டும் என்று முடிவெடுத்தால், அதற்காக இரு நாடுகளும் ஒருங்கிணைய வேண்டும், அப்படி இல்லாமல், கண்மூடித்தனமாக இணைந்து செயல்படுவதாகக் கூறிக் கொண்டு பணத்தை அந்த நாட்டுக்கு வாரிஇறைப்பதில் பலனில்லை என்றும், அந்த பணத்தை முறைப்படி பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதோடு, பாகிஸ்தானுக்கு நாம் பல பில்லியன் டாலர்களை அளிக்கிறோம், அதை வைத்துக் கொண்டு அவர்கள் பயங்கரவாதிகளை உருவாக்கி நமது வீரர்களையேக் கொல்கிறார்கள். எனவே, பாகிஸ்தானுக்கு ஒரு டாலர் கூட கொடுக்கக் கூடாது. பில்லியன் டாலர் என்பது மிகக் குறைந்த பணம் கிடையாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.