தைவானில் முதல் பிட்காயின் கொள்ளை: நான்கு பேர் அதிரடி கைது
தைவானில் முதல் முறையாக பிட்காயின் கொள்ளையில் ஈடுபட்ட நான்கு பேரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.


தைவானில் முதல் முறையாக பிட்காயின் கொள்ளையில் ஈடுபட்ட நான்கு பேரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
20 வயது மதிக்கத்தக்க மூன்று பேர் பிட்காயின் வாங்க விரும்புவதாக கூறி தை என்பரை தைசுங் நகரத்துக்கு வரவழைத்துள்ளனர். தையிடம் பிட்காயின் இருப்பதை அவரது மொபைல்போன் மூலம் அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டனர். இதையடுத்து, அந்த மூன்று பேரும் தையை கண்மூடித்தனமாக தாக்கி விட்டு, அவருடைய கணக்கில் இருந்த 18 பிட்காயின்களை மொபைல்போன் வழியாக தங்களது கணக்குகளுக்கு மாற்றிக் கொண்டனர். அதன் மதிப்பு, 50 லட்சம் தைவான் டாலர் (1,70,000 டாலர்/ நம்மூர் மதிப்பில் சுமார் ரூ.1 கோடி) ஆகும்.
இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட ஷிஹ் என்பவர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தைவானில் பிட்காயினை கொள்ளையடித்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...