உலகெங்கும் இருந்து வந்த ஊழியர்கள்: ரூ.26 கோடி செலவில் முதலாளி தந்த 'புத்தாண்டு  பார்ட்டி'! 

நிறுவனத்தின் நிலைமை கொஞ்சம் மோசமாக இருந்த போதிலும், ஊழியர்கள் அனைவருக்கும் ரூ.26 கோடி செலவில் 'புத்தாண்டு  பார்ட்டி' அளித்த நிறுவன முதலாளி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.    
உலகெங்கும் இருந்து வந்த ஊழியர்கள்: ரூ.26 கோடி செலவில் முதலாளி தந்த 'புத்தாண்டு  பார்ட்டி'! 
Published on
Updated on
1 min read

சான் பிரான்சிஸ்கோ:       நிறுவனத்தின் நிலைமை கொஞ்சம் மோசமாக இருந்த போதிலும், ஊழியர்கள் அனைவருக்கும் ரூ.26 கோடி செலவில் 'புத்தாண்டு  பார்ட்டி' அளித்த நிறுவன முதலாளி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது    

இணைய வழி புகைப்பட பகிர்வு சேவைக்கு உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனம் 'ஸ்னாப்சாட்'. தற்பொழுது 'இன்ஸ்டாகிராம்' இந்நிறுவனத்திற்கு போட்டியாக வந்து விட்டதன் காரணமாக, நிறுவன செயல்பாடுகளில் சிறிய தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இதன் நிறுவனரான இவான் ஸ்பீகெல் இதுகுறித்து பெரிதாக கவலைப்படவில்லை. இந்த சமயத்தில் தனது ஊழியர்க ளை உற்சாகமூட்டும் வகையில் 'புத்தாண்டு  பார்ட்டி' ஒன்றினை நடத்தியுள்ளார்.

இதற்கென லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தின் மைக்ரோசாப்ட் சதுக்கத்தில் அமைந்துள்ள மைக்ரோசாப்ட் அரங்கை அவர் வாடகைக்கு எடுத்துள்ளார். அத்துடன் மைக்ரோசாப்ட் சதுக்கத்தினை நோக்கி அமைந்துள்ள ஆறேழு கட்டடங்ககளையும் வாடகைக்கு எடுத்துள்ளார். கலந்து கொள்பவர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியாக அமெரிக்காவின் பிரபல ராப் பாடகர் ட்ரேக்கின் இதை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாதக்கணக்காக திட்டமிடப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கான முழு செலவான ரூ.26 கோடியையும் இவான் தனிப்பட்ட  முறையில் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 5000 ஊழியர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் என்றும், அவர்கள் அனைவரும் உலகின் வேறு வேறு இடங்களிலிருந்து, விமானம் மூலம் இந்த நிகழ்வுக்கென அழைத்து வரப்பட்டதாகத்  தெரிகிறது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com