டிரம்ப்புக்குத் தடை விதிக்க 'டுவிட்டர்' மறுப்பு!

சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவு செய்திருந்தாலும், அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களின் கணக்குகளை முடக்க முடியாது என்று சுட்டுரை (டுவிட்டர்) சமூக வலைதளம் தெரிவித்துள்ளது.
டிரம்ப்புக்குத் தடை விதிக்க 'டுவிட்டர்' மறுப்பு!
Updated on
1 min read

சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவு செய்திருந்தாலும், அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களின் கணக்குகளை முடக்க முடியாது என்று சுட்டுரை (டுவிட்டர்) சமூக வலைதளம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வலைதள நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உலக அளவில் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கான தளத்தை சுட்டுரை வலைதளம் வழங்கி வருகிறது.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் கருத்துகள், சமூகத்தில் மிகப் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.
எனவே, உலகத் தலைவர்களின் சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்குவதோ, அவர்களது கணக்குகளை முடக்குவதோ முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளை மக்களிடம் கொண்டுச் சென்று, அவைகுறித்த விவாதத்தைத் தொடங்குவதற்காகான வாய்ப்பைப் பறித்துவிடும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைத் தாக்கி அழிப்பதற்கான அணு ஆயுதங்களும், அந்த ஆயுதங்களை அமெரிக்கா வரை ஏந்திச் செல்லக் கூடிய ஏவுகணைகளும் இருப்பதாக வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்அண்மையில் கூறினார்.
மேலும், அந்த அணு ஆயுதங்களை இயக்கக் கூடிய கட்டுப்பாட்டு விசை தனது மேஜையில் எப்போதும் தயாராக இருப்பதாக எச்சரித்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் தனது சுட்டுரைப் பதிவில், 'எனது மேஜையிலும் அணு ஆயுதக் கட்டுப்பாட்டு விசை எப்போதும் தயாராக இருக்கிறது. அது கிம் ஜோங்-உன்னிடம் இருப்பதைவிட மிகவும் பெரிதான, அதிக சக்தி வாய்ந்த அணு ஆயுதக் கட்டுப்பாட்டு விசை' என்று குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து, மிகவும் ஆபத்தான ஆணு ஆயுதத் தாக்குதல்கள் குறித்த மிரட்டல்களை சமூக வலைதளங்கள் மூலம் உலகத் தலைவர்கள் பரிமாறிக் கொள்வது குறித்த சர்ச்சை எழுந்தது.
பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் டொனால்ட் டிரம்ப் வெளியிடும் சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்க வேண்டும் என்றும், அவரது கணக்கை முடக்க வேண்டும் என்றும் சுட்டுரை வலைதள நிறுவனத்திடம் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. அந்தக் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அந்த நிறுவனம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com