இறந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகும் ‘புன்னகை முகத்துடன்’ காணப்பட்ட பெளத்த துறவி!

பாங்காங்கின் தலைநகரான தாய்லாந்தின் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த ஆண்டு
இறந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகும் ‘புன்னகை முகத்துடன்’ காணப்பட்ட பெளத்த துறவி!
Published on
Updated on
2 min read

பாங்காங்கின் தலைநகரான தாய்லாந்தின் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிகிச்சைப் பெற்று வந்த, பெளத்த துறவி லூங் பொர் பியான், தனது 92-வது வயதில் உடல் நலக் குறைவு காரணமாக 16-ம் தேதி இயற்கை எய்தினார்.

கம்போடியாவைச் சேர்ந்த துறவி பியான், மத்திய தாய் மாகாணமான லோப்புரியில் பெளத்த குருவாக தனது வாழ்நாளில் பெரும்பகுதியை துறவறத்திலும் சேவையிலும் கழித்தார். அவர் வாழ்ந்த காலத்தில் அனைவரின் மதிப்பிற்கும் அன்புக்கும் உரியவராகத் திகழ்ந்தார். உடல் நலிவுற்று இயற்கை எய்திய பின் அவரது உடல் லோப்புரியிலுள்ள புத்த மடாலாயத்திற்கு அனுப்பப்பட்டது.

அவர் சேவையாற்றிய அந்த மடாலயத்திலியேயே அவரது உடல் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. அவரது சீடர்கள் அண்மையில் சவப்பெட்டியில் இருந்து உடலை அகற்றிய போது, அவரது உடல் எவ்வித அழிவுக்கும் சிதைவுக்கும் உட்படாத நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் ஆச்சரியமான விஷயமாக துறவி பியான் இறந்து பல வாரங்கள் கடந்த நிலையிலும் அதே புன்னகையுடன் தோன்றினார். ஆச்சரியம் மிகுந்த இந்த நம்ப முடியாத தருணத்தை புகைப்படம் எடுத்து, சமூக ஊடகங்களுக்கு பகிர்ந்தனர் அவரது சிஷ்யர்களான துறவிகள்.

புதிய, சுத்தமான சவப்பெட்டிக்கு மாற்றுவதற்காக  மற்றத் துறவிகள் மூத்த துறவியின் உடலை அகற்றவே அதனை திறந்திருக்கிறார்கள். அப்போது பழைய சவப்பெட்டியில் காணப்பட்ட அவரது உடல் 36 மணி நேரத்திற்கு முன்பு இறந்த ஒருவரின் உடல் போலத்தான் இருந்திருக்கிறது. 

பியானின் அமைதியான புன்னகையுடன் கூடிய முகத்தைப் பார்த்ததும் அவர் பெளத்த மதத்தில் போதிக்கப்படும் நிர்வாண நிலையை அடைந்து விட்டதன் அடையாளம் அது என வியந்தனர் சீடர்கள். அவரது இறப்பின் 100-வது நாளில் இறுதி அஞ்சலி விழா நடைபெறும்வரை, துறவியின் சீடர்கள் அவருக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்வார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com