நவாஸ் ஷெரீஃப் சிறுநீரக நோயால் பாதிப்பு: சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்படுவாரா?

சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் -க்கு சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில் உள்ளதாகத்
நவாஸ் ஷெரீஃப் சிறுநீரக நோயால் பாதிப்பு: சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்படுவாரா?
Published on
Updated on
1 min read

சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் -க்கு சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 2015-ஆம் ஆண்டில் பனமா ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது ஊழல் புகார் எழுந்தது. அவரும், அவரது குடும்பத்தினரும் முறைகேடாக சேர்த்த பணத்தை ரகசியமாக வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், நவாஸ் ஷெரீஃப் மீதான பனாமா ஆவணக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவரை தகுதி நீக்கம் செய்தது. அதையடுத்து, அவர் பிரதமர் பதவியிலிருந்தும், ஆளும் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் விலகினார்.

இதுதொடர்பாக நடைபெற்று வந்த ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீஃபுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவரது மகள் மரியம் நவாஸýக்கு 7 ஆண்டுகளும், மருமகன் முகமது சஃப்தாருக்கு ஓராண்டும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதையடுத்து, அந்த மூவரும் ராவல்பிண்டியிலுள்ள அடிலாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவருக்கு பல்வேறு நோய் இருப்பதால் சிறையிலே அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள பாகிஸ்தான் ஊடகம் ஒன்று, ஷஷசிறையில் உள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் அவரின் சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில் உள்ளதாகவும் அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும் எனவும் சிறைத்துறைக்கு மருத்துவ குழு பரிந்துரைத்துள்ளது” என தெரிவித்துள்ளது. 

மேலும், சிறையில் இருக்கும் மருத்துவமனையில் இதற்குச் சிகிச்சை அளிக்கும் அளவுக்கு வசதிகள் போதுமானதாக இல்லை. அதனால் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இல்லை என்றால் இரவு நேரங்களில் நிலைமை மோசமாகலாம். அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வருவதுடன், உடலில் நீர்ச்சத்து குறைபாடு அதிகரித்துக் காணப்படுகிறது. இதயத்துடிப்பின் வேகம் அதிகரித்து வருவதால், உடல் சோர்வுடன் காணப்படுவதால் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியது அவசியம் எனவும் பரிந்துரைந்துள்ளது.  எனினும், அவரின் உடல் நிலை குறித்து சிறைத்துறை அதிகாரபூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

நாளை மறுநாள் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நவாஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு அந்நாட்டு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com