நேரத்தை வீணடிக்காமல் வாக்களியுங்கள்: ஷேபாஸ் ஷெரீஃப்

நேரத்தை வீணடிக்காமல் வாக்களித்து பாகிஸ்தானின் ஜனநாயகத்தை காப்பாற்றுமாறு பிஎம்எல்-என் கட்சித் தலைவர் ஷேபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
நேரத்தை வீணடிக்காமல் வாக்களியுங்கள்: ஷேபாஸ் ஷெரீஃப்

நேரத்தை வீணடிக்காமல் வாக்களித்து பாகிஸ்தானின் ஜனநாயகத்தை காப்பாற்றுமாறு பிஎம்எல்-என் கட்சித் தலைவர் ஷேபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் புதன்கிழமை நடைபெற்று வரும் பொதுத் தேர்தலில் வாக்களித்த பின்னர் பிஎம்எல்-என் கட்சித் தலைவர் ஷேபாஸ் ஷெரீஃப், செய்தியாளர்களிடம் பேசியதாவது:

யாரும் தயவு செய்து நேரத்தை வீணடிக்காமல் அவரவர் வீடுகளில் இருந்து வெளியேறி வாக்களிக்க வாருங்கள். மக்களின் சக்தியுடன் இந்நாட்டை நிச்சயம் நாங்கள் தலைசிறந்ததாக மாற்றுவோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் கல்வி அளிப்போம், வறுமையை ஒழிப்போம், அனைவருக்கும் வீடு வசதியை ஏற்படுத்துவோம், அணைகளை உருவாக்குவோம். நமக்கு உதவ சீனா மற்றும் அரபு நாடுகள் தயாராக இருக்கின்றன என்றார்.

நவாஸ் கைது நடவடிக்கையை அடுத்து அக்கட்சிக்கு தலைவராக நியமிக்கப்பட்டு தற்போது பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். அந்நாட்டில் சமீபத்தில் பனாமா ஊழல் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் சகோதரர் ஷேபாஸ் ஷெரீஃப் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ், பாகிஸ்தானின் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். அதற்காக தனது கட்சிக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

மொத்தமுள்ள 272 இடங்களுக்காக 12,570 பேர் போட்டியிடுகின்றனர். சுமார் 80 ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 17 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் மிகவும் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com