கிம் ஜோங் உன் விடுதி அருகே தென் கொரியர்கள் போராட்டம்

சிங்கப்பூரில் கிம் ஜோங் உன் தங்கி இருந்த விடுதி அருகே போராட்டம் நடத்திய தென் கொரிய போராட்டக்காரர்கள் 5 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். 
கிம் ஜோங் உன் விடுதி அருகே தென் கொரியர்கள் போராட்டம்

உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பான வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு இன்று (திங்கள்கிழமை) அரங்கேறியது. இந்த சந்திப்புக்காக சிங்கப்பூர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. 

இருப்பினும், நேற்று வடகொரிய அதிபர் தங்கியிருந்த ஆர்சார்ட் சாலையில் உள்ள விடுதி அருகே கையில் பேனர்களுடன் தென் கொரிய போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, 5 தென் கொரியர்களும் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். 

இந்த செய்தியை சிங்கப்பூர் ஊடகம் வெளியிட்டது. ஆனால், அந்த போராட்டக்காரர்களின் நோக்கம் என்ன, அவர்கள் கொண்டுவந்த பேனர்களில் எழுதியிருந்த வாசகங்கள் என்ன என்பது குறித்தான தகவல்களை சிங்கப்பூர் ஊடகங்கள் வெளியிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com