
நியூயார்க்: வடகொரிய அதிபரின் சகோதரரை ரசாயன ஆயுதத்தை பயன்படுத்திக் கொன்றதாக வடகொரியா மீது அமெரிக்கா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அண்ணன் கிம் ஜாங் நம்.இருவருக்கும் தந்தை ஒன்றானாலும் வேறு தாய்களுக்கு பிறந்தவர்கள். தனியாக இருந்த வந்த இவர் கடந்த மாதம் 13-ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.
இது தொடர்பான விசாரணையில் டோன் தி ஹூங், சிட்டி ஆயிஷா ஆகிய 2 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை தற்பொழுது நடைபெற்று வருகிறது.
வாரிசு உரிமை பிரச்னைக்காக வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தான் அவரைக் கொன்று விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட ரசாயனப் பொருளைப் பயன்படுத்தி வடகொரியா கிம் ஜாங் நம்மைக் கொன்று விட்டதாக அமெரிக்கா குற்றச்சாட்டியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்கா தரப்பில் கூறப்படுவதாவது:
வடகொரியா அரசின் உத்தரவின்பேரிலேயே தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதத்தை பயன்படுத்தி வடகொரியா கிம் ஜோங் நம்மை கொன்றுள்ளது. ரசாயன ஆயுதப் பயன்பாட்டிற்கு எதிரான சர்வதேச விதிகளை வடகொரியா வெளிப்படையாக மீறுகிறது.
இவ்வாறு அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.