இலங்கை நாடாளுமன்ற புதிய சபாநாயகராக தினேஷ் குணவர்தனா பொறுப்பேற்பு 

இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ராஜபட்ச கட்சியைச் சேர்ந்த தினேஷ் குணவர்தனா திங்களன்று பொறுப்பெற்றுக் கொண்டுள்ளார். 
இலங்கை நாடாளுமன்ற புதிய சபாநாயகராக தினேஷ் குணவர்தனா பொறுப்பேற்பு 

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ராஜபட்ச கட்சியைச் சேர்ந்த தினேஷ் குணவர்தனா திங்களன்று பொறுப்பெற்றுக் கொண்டுள்ளார். 

குழப்பமான அரசியல் சூழல் நிலவி வரும் இலங்கையில், நாடாளுமன்ற சபாநாயகராக ரணில் விக்ரம்சிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த ஜெயசூர்யா இருந்து வருகிறார். அதிபர் சிறிசேனாவால் பிரதமராக மகிந்த ராஜபட்ச தேர்வு செய்யப்பட்ட நிலையில், இலங்கை பிரதமராக ரணில் தொடர்ந்து நீடிப்பதாக கூறி, ஆதரவை அளித்தவர் இவர்தான். 

இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ராஜபட்ச கட்சியைச் சேர்ந்த தினேஷ் குணவர்தனா திங்களன்று பொறுப்பெற்றுக் கொண்டுள்ளார். 

கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதநதிர கூட்டமைப்பு கட்சிகளின் கூட்டத்தில், ராஜபட்சவின் இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவரான தினேஷ் குணவர்தனா இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். 

தற்போது அவர் புதிய சபாநாயகராக பொறுப்பெற்றுக் கொண்டுள்ளார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com