
இந்தோனேஷியாவின் சுலவேசி மாகாணத்தில் கரையொதுங்கிய மிகப்பெரிய திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து 6 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டன.
31 அடி உயரமுள்ள திமிங்கலத்தின் உடல் கரையொதுங்கிய போது, அது உயிரிழந்ததற்கான காரணத்தை மருத்துவர்கள் ஆராய்ந்தனர்.
அப்போது அதன் உடலில் இருந்து 115 பிளாஸ்டிக் கப், 25 பிளாஸ்டிக் பை உட்பட 6 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் இருந்ததைப் பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பிளாஸ்டிக் குப்பைகள் அதன் வயிற்றை அடைத்துக் கொண்டதால் அதற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கடல் உள்ளிட்ட நீர்நிலைகளை குப்பைப் போடும் தொட்டிகளாக மாற்றிய மக்களுக்கு இந்த திமிங்கலத்தின் மரணம்தான் ஒரு எச்சரிக்கை மணி என்று உணர்ந்து இனியாவது நாம் தூக்கியெறியும் குப்பைகளால் இதுபோன்ற உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் காக்க கவனம் செலுத்துவோம்.
பிளாஸ்டிக்கைத் தவிர்ப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.