
பியாங்யாங்: வடகொரியாவுக்கு வருகை தருமாறு போப்பாண்டவருக்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 2000-ம் ஆண்டு அப்போதைய வடகொரிய அதிபரான கிம் ஜாங் இல் அப்போதைய போப் ஆண்டவரான இரண்டாம் ஜான் பாலுக்கு தங்கள் நாட்டிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்து இருந்தார். அவரது அழைப்பை ஏற்று போப் இரண்டாம் ஜான் வடகொரியா வந்தார் வடகொரியாவுக்கு போப் ஆண்டவர் வந்த முதலும் கடைசியுமான நிகழ்வு இதுவேயாகும்.
இந்நிலையில் வடகொரியாவுக்கு வருகை தருமாறு போப்பாண்டவருக்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளார்.
அடுத்த வாரம் வாடிகன் செல்ல இருக்கும் தென்கொரிய அதிபர் மூன் ஜே போப் ஆண்டவரிடம் தெரிவிப்பார் என தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.