நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ராணுவத்தினரை குறிவைத்து நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48-ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: நைஜீரியாவின் வடக்கு மாகாணமான போர்னோவில் உள்ள ஸரி கிராமத்தில் ராணுவத்தினர் அமைத்திருந்த முகாமை குறிவைத்து போகோ ஹராம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் சிலர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயந்தது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏராளமான லாரிகளில் வெடிகுண்டுகளை நிரப்பி வந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினரை குறிவைத்து அந்தத் தாக்குதலை நடத்தினர். பல மணி நேரம் நீடித்த இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
நைஜீரியாவில் அண்மைக் காலமாக போகோ ஹரம் பயங்கரவாதிகள் ராணுவ நிலைகளை குறிவைத்து அதிக அளவில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மத்தியப் பிரதேச படகு விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்த சோகம்!

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய... புதிய இணையதள முகவரி!

சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் பலி
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

