50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசை

ஹேக்கர்களின் கைவரிசையின் காரணமாக சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் 50 மில்லியன் கணக்குகள் வெள்ளிக்கிழமை இரவு முடக்கப்பட்டன.
50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசை

ஹேக்கர்களின் கைவரிசையின் காரணமாக சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் 50 மில்லியன் கணக்குகள் வெள்ளிக்கிழமை இரவு முடக்கப்பட்டன. இதனை ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க் உறுதிபடுத்தினார். மேலும் 40 மில்லியன் கணக்குகளின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாகவும் நடவடிக்கை எடுத்து வருவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக, ஃபேஸ்புக் கணக்குகள் ஹேக்கர்களால் முடக்கப்பட்டவுடன் அதனை தெரிந்துகொண்ட ஃபேஸ்புக் நிறுவனம், அவற்றை மீட்கும் முயற்சியை துரிதப்படுத்தியது. இதன் விளைவாக முடக்கப்பட்ட அனைத்து கணக்குகளும் மீட்கப்பட்டன. இதுதொடர்பாக மார்க் ஸூக்கர்பெர்க் கூறுகையில்,

கணக்குகள் முடக்கப்பட்ட அனைவரும் மீண்டும் தங்களின் குறிப்பிட்ட மொபைல் மற்றும் கணிணிகளில் புதிய பாஸ்வேர்டுகளுடன் உள்நுழையும்படி அமைத்துள்ளோம். இதில் மொத்தம் 90 மில்லியன் கணக்குகள் உள்ளன. எனவே அவ்வாறு கேட்கும் கணக்குகள் முடக்கப்பட்டு சரி செய்யப்பட்டதாக பொருள். இதில் என்னென்ன பாதுகாப்பு கோளாறுகள் நடந்தது என்று முழுமையாக ஆய்வு நடைபெற்று வருகிறது. விரைவில் பாதுகாப்பு தொடர்பாக புதிய கட்டுப்பாட்டு விதிகள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக அமெரிக்க சைபர் பிரிவு செனட் தலைவர் கூறுகையில், இந்த விவகாரத்தில் முழு விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். அதேபோன்று சமூக வலைதளங்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த இதுவே சரியான தருணம். எனவே அதுதொடர்பாக முக்கியான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது என்றார்.

முன்னதாக, கேம்பிரிட்ஜ் அனலடிக்கா நிறுவனத்தால் 87 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், தனிநபர் தொடர்பான விவரங்கள் திருடப்பட்ட விவகாரம் ஃபேஸ்புக் பக்கத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்தும் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com