நரம்பியக்க நோய்க்கு வெற்றியின் ருசியை பரிசளித்தவர்: ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் மரணம்

இங்கிலாந்தை நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 76.
நரம்பியக்க நோய்க்கு வெற்றியின் ருசியை பரிசளித்தவர்: ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் மரணம்


இங்கிலாந்தை நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 76.

நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்டீஃபன் ஹாக்கிங் மரணச் செய்தியை அவரது மூன்று மகன்களும் கூட்டாக இன்று அறிவித்தனர்.

மிகச் சிறந்த விஞ்ஞானி, தலைசிறந்த மனிதர், இவரது கண்டுபிடிப்புகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு மக்கள் மனதில் இருக்கும் என்று அவரது மகன்கள் லூசி, ராபர்ட், டிம் ஆகியோர் கூறியுள்ளனர்.

1942ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டில் ஸ்டீஃபன் ஹாக்கிங் பிறந்தார். சாதாரண பிள்ளைகளைப் போலவே வளர்ந்த ஹாக்கிங் 21 வயதாக இருக்கும் போது நரம்பியக்க நோயால் பாதிக்கப்பட்டார். படிப்படியாக அனைத்து உறுப்புகளும் செயலிழந்து போன நிலையிலும், அவரது தன்னம்பிக்கை மட்டும் அதீதமாக வேலை செய்தது.

செயலிழக்கும் ஒவ்வொரு உடல் உறுப்புக்கும் மாற்று வழியை தனது கண்டுபிடிப்பாலேயே தயாரித்து பயன்படுத்தினார். இதுபோன்றதொரு கொடிய நோய் தாக்கி 50 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து மருத்துவர்களுக்கே அதிர்ச்சியை அளித்தார் ஹாக்கிங்.

1985ம் ஆண்டு நோய் இவரை கடுமையாக தாக்க மூச்சு விடக் கூட இயலாத நிலையில், டியூப் பொறுத்தப்பட்டது. இதனால் எலக்ட்ரானிக் வாய்ஸ் இயந்திரத்தின் உதவியால்தான் இவர் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் நிலை ஏற்பட்டது.

எந்த நிலையிலும் ஹாக்கிங் தனது விஞ்ஞானப் பணியை நிறுத்தவில்லை. தொடர்ந்து பணியாற்றினார். கடுமையாக பணியாற்றிக் கொண்டே இருந்தார்.

தனது தோற்றத்தைப் பற்றி எப்போதும் அவர் கவலைப்பட்டதே இல்லை. வழக்கம் போல தொலைக்காட்சிகளில் தோன்றி தனது அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்து வந்தார். எளிய நடையில் அவர் எழுதிய பல அறிவியல் புத்தகங்கள் ஏராளமான இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது.

1965ம் ஆண்டு இளமை பருவத்தில் ஜேன் வில்டி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட ஹாக்கிங், பிறகு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தனக்கு உதவிகளை செய்து வந்த செவிலியர் பால் ஈர்ப்பு கொண்டு அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அனைத்தையும் தாண்டி ஒரு புனிதமான திருமணமாக இது அமைந்தது.

ஸ்கைப் மூலம் உலகில் உள்ள தனது நண்பர்கள், விஞ்ஞானிகள் பல பலரோடு தொடர்பு கொண்டிருந்தார். முதலில் இருந்ததை விட, தொழில்நுட்ப உதவியோடு சமீபத்தில் தனது கருத்துக்களை இரண்டு மடங்கு அதிகமாக வெளிப்படுத்தியவர் ஸ்டீஃபர் ஹாக்கிங்.

கோட்பாடு இயற்பியலாளர், எழுத்தாளர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் என பன்முக ஆளுமை கொண்டவர். இயற்பியல் ஆராய்ச்சியைப் போலவே எழுத்துலகிலும் இவர் கொடிகட்டிப் பறந்தார். அண்டவியல், குவாண்டம் ஈர்ப்பு உள்ளிட்டவை இவரது ஆய்வுகளில் மிகவும் குறிப்பிடத்தக்கவை.

பேசவோ, எழுதவோ முடியாத நிலையிலும் அதிநவீன சக்கர நாற்காலி மூலம் அவரது செயல்பாட்டை மேற்கொண்டு வந்தார். பேச்சும் திறனை இழந்த போது ஸ்பீச் சின்தைசர் என்ற செயலியை கண்டுபிடித்தார். 

நரம்பியக்க நோயால் பாதிக்கப்பட்ட போது, ஸ்டீஃபன் இன்னும் 2 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்வார் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர்.  ஆனால் அவர்களது கணிப்பை பொய்யாக்கினார் ஹாக்கிங்.

1963 முதல் செயலிழப்பை சந்தித்து வந்தாலும், தனது உடலில் செயல்படும் ஒரே ஒரு உறுப்பான கன்னத்தை அசைப்பதன் மூலம் தனது கருத்துக்களை கூறி வந்த ஹாக்கின்ஸ், சில குறியீடுகளை உதடுகளையும், புருவத்தையும் அசைத்து வெளிப்படுத்தினார்.

அவரது மூளையோடு கணினியை இணைத்து அவர் பேச நினைப்பதை கணினி திரையில் எழுத்து வடிவில் கொண்டு வரும் அளவுக்கு அவரது மாணவர்கள் ஒரு கணினியுடன் கூடிய நாற்காலியை உருவாக்கினர்.

விண்வெளிக்குச் செல்லாத விஞ்ஞானி ஸ்டீஃபன்,  மாற்றியமைக்கப்பட்ட விமானத்தில் அண்டார்டிகா மீது பறந்தவர். 

தனது பெயரை தவறான விஷயங்களுக்கு பயன்படுத்தாத வகையில், ஸ்டீஃபன் ஹாக்கிங் தனது பெயருக்கு காப்புரிமை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com