வடிவேலு பாணியில் காணாமல் போன குட்டித் தீவைத் தேடுகிறது ஜப்பான்

வடக்கு ஜப்பானில் இருந்த குட்டித் தீவு மாயமாகிவிட்டதாக அறிவித்திருக்கும் ஜப்பான் அதனைத் தேடி வருகிறது.
வடிவேலு பாணியில் காணாமல் போன குட்டித் தீவைத் தேடுகிறது ஜப்பான்


டோக்யோ: வடக்கு ஜப்பானில் இருந்த குட்டித் தீவு மாயமாகிவிட்டதாக அறிவித்திருக்கும் ஜப்பான் அதனைத் தேடி வருகிறது.

திரைப்படத்தில் கிணறைக் காணவில்லை என்று வடிவேலு தேடுவது நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்டிருந்தது. ஆனால் இங்கே ஜப்பானின் குட்டித் தீவு மாயமாகியிருப்பது உலகத்துக்கே ஒரு சவாலாக மாறியுள்ளது.

அதாவது, ஜப்பான் கடற்படையினர் நடத்திய ஆய்வில் 1987ம் ஆண்டு ஹோக்கைடோ தீவுக்கு அருகே ஒரு சிறிய நிலப்பரப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு எசாம்பி ஹனகிட்டா கோஜிமா என்று பெயரிடப்பட்டு ஜப்பானுடன் இணைக்கப்பட்டது.

கடலில் இருந்து நான்கரை அடி உயரத்தில் சமீபத்தில் காணப்பட்ட இந்த குட்டித் தீவு, தற்போது மாயமாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அந்த சிறிய நிலப்பரப்பு சமீபகாலத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் கடலுக்குள் மூழ்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதனால், உலக வெப்பமயமாதலால் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது குட்டித் தீவு காணாமல் போயிருப்பது அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com